இரட்டை வாய்க்கால் பகுதியில் பாரிய கவச வள்ளம் மீட்பு

Read Time:2 Minute, 26 Second

ltteunderwater-jஇரட்டை வாய்க்கால் குளம் பகுதியில் இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது நீருக்கு அடியில் மிகவும் பாதுகாப்பாகச் செல்லக் கூடிய உலோகத்திலான கவச வள்ளமொன்றைக் கைப்பற்றியுள்ளனர். வாய்க்கால் ஒன்றின் வழியாக கடலுக்குள் செல்லக் கூடியதான வசதியுடன் இது அமைக்கபட்டிருந்தது. இதன் நீளம் அறுபது அடி. ரயில்வே தண்டவாளங்களையும் உலோகங்களையும் பயன்படுத்தி இது அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் கவச வள்ளத்தை கடலுக்குள் இலவாகச் செலுத்திச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்த நீர்த் தடாகம் ஒன்றும் அந்தப் பகுதியில் காணப்பட்டது. இதே வேளை, முல்லைத்தீவு, கரைய முள்ளிவாய்க்கால் பகுதியை படையினர் நேற்று (06) கைப்பற்றியுள்ளனர்.; இன்று (07) அதிகாலை அப்பகுதியில் ஏற்பட்ட கடும் மோதல்களைத் தொடர்ந்து அப்பகுதியில் பாரிய பாதுகாப்பரண் ஒன்றினையும் படையினர் கைப்பற்றியுள்ளனர். பாதுகாப்பு வலயப் பகுதியில் புலிகளின் பல சடலங்கள் காணப்படுவதாகவும் அப்பகுதியில் இருந்து ரி56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கரைய முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து புலிகளின் சடலங்கள் 03, ரி56 ரக துப்பாக்கிகள் 02, தொலைத்தொடர்பு கருவி 01 என்பன மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இது இவ்வாறிருக்க மோதல் இடம்பெறும் பகுதியிலிருந்து 3000; கர்ப்பிணிப் பெண்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளதாகவும், இவர்களில் 350 பெண்கள் அடுத்த மாதம் குழந்தைகளைப் பிரசவிப்பார்கள் என்றும் ஐ.நா புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

ltteunderwater-j

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமைச்சர் டக்ளஸை கொலை செய்ய இரண்டு கோடி ரூபா பேரம்: ரூபா 10 இலட்சம் முற்பணமும் ஆயுதங்களும் புலிகளினால் கையளிப்பு
Next post மக்கள் இருக்கும்வரை தோல்வியில்லை: விடுதலைப் புலிகள்