இலங்கை நிலவரம் குறித்து பான்கீ மூன் ஜனாதிபதியுடன் மீண்டும் தொலைபேசியில் கலந்துரையாடல்

Read Time:2 Minute, 30 Second

இலங்கை நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணிப்பதாகவும் இதுகுறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மீண்டும் தொலைபேசிவாயிலாக கலந்துரையாடியதாகவும் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்தார். மாதாந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பான் கீ மூன் இதனைத் தெரிவித்தார். மோதல் இடம்பெறும் பகுதியில் மனிதாபிமான நிலையை கருத்திற் கொண்டு போர்நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தேன் இதன்மூலம் அப்பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கு தேவையான உணவு மருந்து விநியோகங்கள் மேற்கொள்ளலாம் அத்துடன் அப்பகுதியிலுள்ள நிலவரம் குறித்து ஐ.நா.ஆராயவும் வாய்ப்பு கிட்டும் இதன்மூலம் உயிர்கள் பாதுகாக்கப்படும் எனவும் பான் கீ மூன் இலங்கை நிலவரம் தொடர்பில் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களைக் கருத்திற் கொண்டு கனரக ஆயுதங்களையும் ஆட்லறிகளையும் பயன்படுத்தவேண்டாமென அதிகாரிகளிடம் நான் கோரியுள்ளேன். அதேவேளை பலவந்தமாக படையில் சேர்க்கும் நடவடிக்கையை இருதரப்பும்; கைவிட வேண்டும். இருதரப்பும் உடனடியாக மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்து சமாதானத்தை ஏற்படுத்துவது தற்போதைய தேவைப்பாடாக உள்ளது. பொதுமக்களை பாதுகாப்பதும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு அமைவாக செயற்படுவது குறித்தும் நான் மீண்டும் வலியுறுத்துகிறேன் இலங்கை நிலவரத்தை சர்வதேசம் உன்னிப்பாகக் கண்காணிப்பதுடன் சர்வதேச சட்டங்கள் மீறப்படுவது தொடர்பிலும் அவதானிக்கிறது எனவும் பான்கீ மூன் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனுஷிகா என்ற சிறுமியைக் கடத்தி கப்பக் கோரிக்கை விடுத்து கொலை செய்யப்பட்டதை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாக கண்டிக்கின்றது..
Next post கரையாமுள்ளிவாய்க்காலை இராணுவத்தினர் கைப்பற்றியதாக அறிவிப்பு