நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதன் பின்னர், நிலைமையைப் புரிந்து கொண்டு நோர்வேயின் நிலைப்பாடு மாறியுள்ளது – வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம

Read Time:3 Minute, 24 Second

இலங்கையின் உள் விவகாரங்களில் இறைமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்தவொரு வெளிநாட்டின் தலையீடுகளும் அழுத்தங்களும் இல்லை. மாறாக நாம் முன்னெடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நிரல்களுக்கு அவை பூரண ஒத்துழைப் பையும் ஆதரவையுமே வழங்குகின்றன என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்:- புலிகள் இயக்கம் தொடர்பில், நோர்வே அரசின் நிலைப்பாடு மாற்றமடைந்திருக்கிறது. நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதன் பின்னர், நிலைமையைப் புரிந்துகொண்டு நோர்வேயின் நிலைப்பாடு மாறியுள்ளது. நோர்வேயிலுள்ள எமது தூதரகம், புலிகளின் பயங்கரவாத வலையமைப்பினரால் தாக்கப்பட்ட உடனடியாகவே கண்டனத்தைத் தெரிவித்திருந்தோம். தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்புமாறு கேட்டுக் கொண்டிருந்தோம். இது விடயமாக நோர்வே அரசு வருத்தம் தெரிவித்தி ருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்துப் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுகின்றன. தூதரகம் தாக்கப்பட்டதற்கு நட்டஈடு வழங்குவதாக நோர்வே கூறியது. ஆனால், நாம் அதனை ஏற்கவில்லை. எமது சொந்தக் செலவில் திருத்திக் கொள்வதாகக் கூறினோம். இந்தச் சம்பவத்திற்குப் பின்னர், புலிகள் தொடர்பான நிலைப்பாட்டை நோர்வே மாற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதன் எதிரொலி மற்றும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் புலி ஆதரவு ஆர்ப்பாட்டங்களைக் கண்டித்தும் இலங்கைக்கு வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன என்றும் ஜே. என். பீ. தலைவர் விமல் வீரவன்ச சபை ஒத்திவேளை பிரேரணையொன்றை முன்வைத்தார். இந்தப் பிரேரணையை வழிமொழிந்த ஐ. தே. க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல நோர்வேயில் தூதரகம் தாக்கப்பட்டதைத் தமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார். ‘பாதுகாப்பு வலயத்தில் எவ்வளவு பொதுமக்கள் இருந்தாலும் எமக்கு பொறுப்பு இருக்கிறது. எனவே, புலிகளுக்குச் சார்பாகக் கோஷமெழுப்புவோருக்கு உண்மையைச் சொல்லுங்கள். புலிகளை இனிப் பயங்கரவாதப் பாதையில் ஒதுக்கி வைத்து விட்டு மக்களின் நலன்களைக் கவனிப்போம் என அமைச்சர் பதிலளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதன் பின்னர், நிலைமையைப் புரிந்து கொண்டு நோர்வேயின் நிலைப்பாடு மாறியுள்ளது – வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம

  1. வன்முறைகள் எப்போதும் வெற்றி அளிப்பதில்லை

  2. இலங்கை நாட்டில் உள்ள எவருக்கும், இன்று வெளிநாடுகளில் நிகழ்த்தப்படுகின்ற உணர்ச்சிக் கொந்தளிப்புகளிலுள்ள மிகைத் தன்மையும், அதீத கற்பனா ஆவேசங்களும் பெரிய ஆச்சரியத்தையே ஏற்படுத்தும். இவர்களது ஒருதலைப்பட்சமான புரிதல்களும், ஒருதலைப்பட்சமான உயிரன்பு ஆவேசங்களும் பிரச்சினையின் முழுமையை விளங்கிக் கொள்ள விடாமல், உயிர்களை அழித்து இனக்குழு வெற்றியை நிலைநாட்டுவதை ஒரே சாத்தியமாகக் கருதிய, ‘அந்தக்கால’த்துக்குரிய உணர்ச்சிக் கொந்தளிப்பாகவே இருக்கிறது. அதனால்தான் சண்டையில் பேரெடுத்த புலிகளைத் தவிர தமிழ்மக்களுக்கு வேறு நாதியில்லை என்று கருதிக்கொண்டு, அவர்களுக்குக் கவசமாக நின்று அழியும்படி மக்களை ஆவேசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். புலிகளிடமுள்ள சீருடை தரித்தவர்களாலும் ஆயுதங்களாலும் தமிழீழத்தை அடைந்துவிடலாம் என்ற இவர்களுடைய ஏக்கக் கனவுக்காக, புலிகள் மக்களைத் தங்களுடன் வைத்திருந்து அழிப்பதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Previous post பிரித்தானியா, இலங்கை உறவில் விரிசல்!!!
Next post மோதல் பகுதிகளில் மக்கள் பட்டினி: உணவுப் பொருள்களை அனுப்புமாறு புலிகள் கோரிக்கை