வன்னியில் மோதலில் பலியானவர்களில் விவரங்களை ஜ.நா பகிரங்கப்படுத்தவில்லை கொழும்பிலுள்ள தூதரகம் மறுப்பு

Read Time:2 Minute, 56 Second

மோதல்கள் காரணமாக வன்னியில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் அடங்கிய ஆவணத்தை தாம் ஒரு போதும் பகிரங்கப் படுத்தவில்லையேன கொழும்பிலுள்ள ஜக்கிய நாடுகள் சபை அலுவலகம் தெரிவித்துள்ளது ஜ.நா அலுவலகத்தை மேற்கோள்காட்டி வெளியான புள்ளி விபரங்களை நிராகரித்த இலங்கை அரசு இது குறித்து கடும் எதிர்பை தெரிவித்ததன் பின்னணியிலேயே ஜ.நாவின் கொழும்பு அலுவலகத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது அலங்கைக்கான ஜக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி நீல் புஹனே விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பவை வருமாறு கடந்த பத்து நாட்களாக ஊடகங்களில் வெளியாகியுள்ள புள்ளிவிபரங்கள் தொடர்பாக கொழும்பு அலுவலகத்திடம் பலர் கேள்வியேழுப்பியுள்ளனர் ஜக்கிய நாடுகளில் உள்ளகப் பணிகளுக்கான ஆவணத்திலிருந்தே இந்தப் புள்ளிவிபரங்கள் பெறப்பட்டன என்று அதன் மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைமையதிகாரி ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார் மேலும் இந்தப் புள்ளி விவரங்கள் முளுமையாக நம்பகத்தன்மை மிக்க விதத்தில் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியாதவை மோதல் நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை எவரும் சென்றடைய முடியாமையே இதற்குக் காரணம் ஒரு குறிப்பிட்ட நிலைவரம் குறித்த ஒட்டுமொத்த மதிப்பீடு ஜ.நா செயலாளர் நாயகத்தின் அறிக்கை மூலமாகவோ அல்லது மூத்த அதிகாரிகளின் அறிக்கை மூலமாகவோ வெளியாகும் கடந்த மூன்று மாதங்களாக இடம்பெறும் கடும் மோதல் பொதுமக்களுக்கு எற்படுத்தியுள்ள இழப்புக் குறித்து அவர்கள் தொடர்சியாக தமது கவலையை தெரிவித்து வந்தனர் பொதுமக்களை பாதுகாப்பதற்கான அதன் கடமையை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசிடம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதில் ஜ.நா அர்பணிப்புடன் உள்ளது ஆனால் உயிரிழந்தோர் தொடர்பான புள்ளி விவரம் எதனையும் ஜ.நா வெளியிடவில்லை. என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பு மாணவி தினுஷிவின் படுகொலை சந்தேகநபர்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொலை
Next post பிரிட்டனில் புகலிடம்கோரி விண்ணப்பித்த இரு இலங்கையருக்கு பிரித்தானிய மேல் நீதிமன்றம் அனுமதி அளித்தது