தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் எதிர்வரும் 5ம் திகதி ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்

Read Time:1 Minute, 14 Second

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் கட்சிகள் எதிர்வரும் 5ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர் இந்த சந்திப்பின்போது இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் உள்ள மக்கள் தொடர்பில் கலந்துரையாடவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆற்றப்படவேண்டிய மனிதாபிமான சேவைகள் மற்றும் வடக்கின் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளன இதற்கிடையில் இந்த சந்திப்பின்போது இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதாபிமான முன்னெடுப்புகள் குறித்து தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கயிருப்பதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் எதிர்வரும் 5ம் திகதி ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்

  1. நாங்கள் சரணடைவது மற்றும் ஆயுதங்களைக் கீழே போடுவது என்ற கேள்விகளுக்கு இங்கே இடமில்லை என தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கூறியுள்ளதாக அனைத்துலக ஊடகமா அனைத்துலக ஊடகமான ‘அசோசியட் பிறஸ்’ வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

    நாங்கள் சரணடைவது மற்றும் ஆயுதங்களைக் கீழே போடுவது என்ற கேள்விகளுக்கு இங்கே இடமில்லை. மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளை நாம் பெறும் வரையிலும் எமது போராட்டம் தொடரும் என நடேசன் கூறியுள்ளார்.

    போரை நிறுத்தும் அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைகள் அனைத்தையும் சிறீலங்கா அரசாங்கம் புறந்தள்ளி வருகின்றது. அனைத்துலக சமூகம் இந்தக் கொடுமையான போரை நிறுத்த முனவரவேண்டும். இக்கொடிய போரில் மக்களின் உயிர்களைக் காக்க அக்கறை இருந்தால் எந்த நாடென்றாலும் தனது இராஜதந்திர வரப்புகளைக் கடந்து இப்போரை நிறுத்த முன்வரவேண்டும் என அரசியற்துறைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளனர்.

    விடுதலைப் புலிகளின் தலைமை உட்பட நாம் அனைவரும் எமது தாயத்தில் இருந்தவாறே போராட்டத்தை நடத்தி வருகின்றோம். சிறீலங்காப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தயா மாஸ்ரர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியமான உறுப்பினர் அல்ல எனவும் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Previous post அவ்வப்போது கிளாமர் படங்கள்..
Next post கல்முனைப் பிரதேசத்திலுள்ள கடற்கரைப்பள்ளி பகுதியில் வெடிப்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது