நடத்தப்பட்ட தேர்தலில் ஆளும் கட்சிக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளதையடுத்து மேலும் இரு மாகாணசபைகளைக் கலைக்க அரசாங்கம் திட்டம்

Read Time:2 Minute, 52 Second

மேல்மாகாண சபைக்காக கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தேர்தலில் ஆளும் கட்சிக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளதையடுத்து ஊவா மற்றும் தென்மாகாணசபைகளையும் கலைத்துவிட்டு அவற்றுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன ஊவா மாகாணசபையின் பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதமும் தென்மாகாண சபையின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதமும் முடிவுக்குவருகிறது இருந்த போதிலும் இந்த இரு மாகாண சபைகளையும் ஓகஸ்ட் மாதத்தில் கலைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த இரண்டு மாகணங்களிலும் ஜக்கிய மக்கள் சுகந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப் பாPட்சைகளை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு உத்தரவு இட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேல்மாகாண சபைத் தேர்தலின் போது முன்னாள் படையினர் பலரை தாம் தமது சின்னத்தில் களமிறக்கியதாகத் தெரிவிக்கும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த அவர்கள் அனைவரும் அதிகளவு விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியிருப்பதாகவும்; குறிப்பிட்டுள்ளார். இதேபோன்ற ஒரு அணுகுமுறையை தான் தாம் ஊவா மற்றும்; தென்மாகாண சபைத் தேர்தல்களின் போதும் கடைப்பிடிக்க விருப்பதாகவும் அவர்  தெரிவித்தார். இதேவேளையில் ஊவா மற்றும்  தென்மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கு ஐ.தே.கட்சி தன்னை தயார்படுத்தத் தொடங்கியுள்ளது. இத்தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் அதற்காக தமது விண்ணப்பங்களை கட்சி தலைமையகத்துக்கு அனுப்பி வைக்குமாறும் கட்சி தலைமை கேட்டுக் கொண்டுள்ளது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருகோணமலையில் தேடுதல் நடவடிக்கை 15 தமிழர்கள் கைது
Next post புலிகளின் ஆட்டம் முடிந்து விட்டது – மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகிறார்