முல்லைத்தீவு கடற்பரப்பில் புலிகளின் 4 படகுகள் அழிப்பு, 25 புலிகள் பலியென கடற்படை தகவல்

Read Time:3 Minute, 5 Second

முல்லைத்தீவு, கடற்பரப்பில் நடமாடிக் கொண்டிருந்த கடற்புலிகளின் ஆறு படகுகளை கடற் படையினர் முற்றாக தாக்கியழித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். நேற்று அதிகாலை நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் கடற் புலிகளின் முக்கியஸ்தர்கள் உட்பட 25 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புலிகளின் நான்கு தற்கொலைப் படகுகளும், இரண்டு தாக்குதல் படகுகளுமே கடற் படையினரின் தாக்குதல்களில் நிர்மூலமாக்கப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தகவல் தருகையில்:- பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட வெள்ளைமுள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் கடற்பரப்பில் முல்லைத்தீவு கடலிலிருந்து மூன்று கடல் மைல் தொலைவில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் புலிகளின் இரண்டு படகுகள் வருவதை கடற்படையினர் அவதானித்துள்ளனர். கலிபர் துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருந்த இந்த இரண்டு படகுகளும் முல்லைத்தீவு கடற்பரப்புக்குள் நுளைவதை அவதானித்த கடற்படையினர் அதனை இலக்கு வைத்து கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல்களில் அந்தப் படகுகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம், நடந்த சிறிது நேரத்தில் கடற்படையின் பாதுகாப்பு முன்னரங்குகள் மீது தாக்குதல் நடத்தும் பொருட்டு அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட நான்கு தற்கொலைத் தாக்குதல் படகுகள் வருவதை கடற்படையினர் அவதானித்துள்ளனர். இதனையடுத்து அந்த படகுகளையும் இலக்கு வைத்து கடற்படையினர் கடும் தாக்குதல்களை நடத்தி தாக்கியழித்துள்ளனர். கடற்படையின் விஷேட படகு படையணியினரும், அதிவேக தாக்குதல் படகுகளும் இணைந்தே புலிகளின் படகுகள் மீது கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல்களில் கடற்புலிகளின் பெண்கள் பிரிவின் மூன்று முக்கியஸ்தர்கள் உட்பட 25 கடற்புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் கடற்படை படகு ஒன்றுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபா இறுதிநேரத்தில் தப்பிச்செல்ல பாரிய 11 படகுகள் தயார் நிலையில்.. ‘புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் எட்டியுள்ளது’ என்கிறார் உதய நாணயக்கார
Next post மட்டக்களப்பில் மாணவி கடத்தல்; பெற்றோர் உறவினர் ஆர்ப்பாட்டம்.. குற்றவாளிகளை பிடிக்க அமைச்சர் கருணாஅம்மான் வேண்டுகோள்