விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைய வேண்டும் : ப.சிதம்பரம்

Read Time:1 Minute, 55 Second

மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைய வேண்டு மென்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,”இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு இருக்கிறது. இனி, இலங்கை ராணுவத்தினர், பாதிக்கப் பட்ட தமிழர்களை பத்திரமாக மீட்கும் பணியிலும், அவர்களுக்கு உதவும் பணியிலும் ஈடுபட வேண்டும் என்று இலங்கை அரசு கூறி இருக்கிறது. இந்தநிலையில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், மற்றும் அவருடன் இருப்பவர்கள், ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, சரண் அடைய வேண்டும். நீண்டகால பிரச்சினை பற்றி பேச்சு நடத்த முன்வர வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்ய முன்வந்தால், அவர்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். பிரபாகரன் பிடிபட்டால், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா? என்பது பற்றி இப்போது பேச வேண்டியது இல்லை. முதலில் அவர் சரண் அடைய முன்வரட்டும். நான் எதையும் யூகித்து கொண்டு கூற முடியாது. இலங்கை போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பது தான் முக்கியம். இலங்கைக்கு இந்தியா உதவி செய்கிறது என்ற தகவலை சிலர் பரப்புகிறார்கள். இது தவறான தகவல். இந்தியா அவ்வாறு நடக்கவில்லை.” என்று ப.சிதம்பரம் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் அரசசார்பற்ற நிறுவன முக்கியஸ்தர்களுடன் கொழும்பில் சந்திப்பு
Next post பிரபா இறுதிநேரத்தில் தப்பிச்செல்ல பாரிய 11 படகுகள் தயார் நிலையில்.. ‘புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் எட்டியுள்ளது’ என்கிறார் உதய நாணயக்கார