லண்டனில் இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்: 5 தமிழர்கள் கைது

Read Time:2 Minute, 11 Second

லண்டனில் இந்தியத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதாக 5 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் போர் நிறுத்ததை வலியுறுத்தி பிரிட்டன் வாழ் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரிட்டன், பிரான்ஸ் உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இலங்கையில் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தியும் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அங்குள்ள இந்திய தூதரகம் அருகே ஊர்வலம் சென்ற போது, ஊர்வலத்தில் சென்ற சிலர் தூதரகம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் தூதரகத்தில் விசா பெறும் இடத்துக்கு அருகே இருந்த குண்டு துளைக்காத கண்ணாடிக் கதவு, ஐன்னல்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. இதனையடுத்து தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக 5 தமிழர்களை போலீஸôர் கைது செய்தனர். முதலில் சுமார் 300 பேர் மட்டுமே ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர். சிறிது நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடிவிட்டனர். அவர்கள் இலங்கை அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினர். சுமார் 3 மணி நேரம் ஆர்ப்பாட்டம் நீடித்தது என்று லண்டன் போலீஸôர் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “லண்டனில் இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்: 5 தமிழர்கள் கைது

  1. இவங்களையெல்லாம்.. நாடு கடத்தவேனும்…
    இந்த வீரவான்கள் எல்லாம் வன்னி போய் போரிட வேணும்…

    கேக்கவே ரொம்ப சிரிப்பாக இருக்கு….. ஆர்ப்பாட்டம் எண்டு இளசுகள் காமக்களியாட்டம் நடத்துதுகள்.. இவர்களின் இந்த கூத்துக்கு அப்பாவி வன்னி மக்கள் பலியாகின்றார்கள்..

    உலகமெல்லாம் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் என்ன நடக்குது எண்டு உலகமே சிரிக்குது, தண்ணி அடிப்பதும்… பெட்டையளோட சல்லடிப்பதும் ..ஐயோ கேவலம்…கேவலம்.. தமிழனாய் இருப்பது கேவலம்…

  2. உலகில் தமிழராகப் பிறந்ததற்காக ஒவ்வொரு தமிழனும் வெட்கப்படவேண்டும்.
    பிரபா தனது மாவீரர் தின உரையில், “உலக நாடுகள் எங்களை அனுதாபத்தோடு பார்க்கக்கூடாது” என எழுதிக் கொடுத்ததை அதன் அர்த்தத்தினை விளங்கிக்கொள்ளாது வெளுத்துக்கட்டுவார். புலம்பெயர்ந்ததுகளும் புதிசா ஏதோ சொல்லுறார் என விளக்கமில்லாமல் விளங்கிக்கொள்ளும். ஆனால், இப்ப ‘கவனயீர்ப்புப் போராட்டம்’ எண்டு உலக நாடுகளுக்குப் படம் காட்டுகினம். இது எதுக்காக எண்டு யாராவது அறிவுள்ள புலம்பெயர்ந்த புலித் தமிழன் யோசிச்சுப் பார்த்தானோ? மூளையிருந்தால் தானே! எல்லாம் உலகநாடுகளின் கவனத்தைத் திருப்பி அனுதாபத்தைப் பெறத்தான். அப்ப…. தலைவர் சொன்ன மாவீரர் தினவுரை என்னாகிறது? தலைவர்தான் தனக்கேற்ற மாதிரி சட்டங்களை மாத்துவாரே! மற்றவங்களெல்லாம் மடையர் என்கிற நினைப்பு…
    சரி….. உலகநாடுகளை கவனயீர்ப்புச் செய்ய வெளிக்கிட்டு கடைசியில உலகநாடுகள் எல்லாம் தமிழினத்தையே வெறுக்கிற அளவுக்குக் கொண்டுவந்தாச்சு.
    வார்த்தை ஜாலங்களால் தமிழரை ஏமாற்றுவதுபோல் வெள்ளைக்காரரையும் ஏமாற்றலாம் எனப் பிரபாவும் மோட்டுப் புலிக்குழுவும் போட்ட திட்டங்கள் எல்லாமே தவிடுபொடியாகிவிட்டன.
    1. அமைதியாக நடாத்தவேண்டிய கவனயீர்ப்புப் போராட்டங்கள் வெறிபிடித்த பிரபாவின் வெளிநாட்டு வால்களால் ஆக்ரோஷமாக்கப்பட்டன. இலங்கையில் இருப்பதுபோன்ற நினைப்புடன் தாரை தப்பட்டைகளுடன் கூச்சல், வீதி மறியல் என அமைதியான வாழ்க்கை வாழும் வெளிநாட்டவர்க்கு தங்களது சொந்தப் புத்தியைக் காட்டி வெறுப்பைச் சம்பாதித்தது.
    2. இன அழிப்பைத் தடுக்க வெளிநாட்டினைக் கோராது; வீ வோன்ற் தமிழீழம்!, அவர் லீடர் பிரபாகரன்! எனக் கத்தி பயங்கரவாதி என்ற தடையை நீக்கக் கோரியது. யோசிக்கத் தெரிந்திருந்தால்; இன அழிப்பை நிறுத்தக் கேட்டிருந்தால், இப்போது தமிழ் மக்களைக் காப்பாற்றும் வெளிநாட்டின் உதவியோடு பிரபாவும் அவர் கும்பலும் கொஞ்சம் காப்பாற்றப்பட்டிருக்கும்.
    3. கவனயீர்ப்புப் போராட்டத்தில் புலிக்கொடி பிடித்த வருங்கால மாவீரர்கள் தொலைக்காட்சிப் பேட்டியின்போது அக் கொடி தமிழரின் தேசியக் கொடியென கேணைத்தனமாக விளக்கமளித்து தாங்கள் புத்திசாலி எனவும் வெள்ளைக்காரன் முட்டாள் எனவும் நினைத்துக்கொண்டது.
    4. காலம் பிந்திய கவனயீர்ப்புப் போராட்டம். மன்னார் பகுதியூடாக இராணுவம் முன்னேறியபோது இப் போராட்டம் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். தலைவர் உள்ளுக்கை விட்டிட்டு அடிப்பார்… உள்ளுக்கை விட்டிட்டு அடிப்பார் என அணில் ஏற விட்ட நாயைப்போல் காத்திருந்துவிட்டு, கோவணம் உருவப்பட்டபோது…. ஐயோ இன அழிப்பு! ஐயோ இன அழிப்பு! எனக் கத்துவதில் என்ன பயன்.
    ஆக மொத்தத்தில் அன்ரன் பாலசிங்கத்துக்குப் பிறகு புலிக்கும்பலுக்கு ஒரு அரசியல் அறிவுள்ள ஒருவன் இல்லாமலேயே போய்விட்டது.
    அன்று தந்தை செல்வா சொன்னதுபோல் `தமிழரைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்`
    (பி.கு- சிந்திக்கத் தெரிந்தவர்கள் சிந்தியுங்கள்)

Leave a Reply

Previous post உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும்: ஜோன் ஹோல்ம்ஸ்
Next post பிரபாகரன் கிழக்கு பகுதிக்கு தப்பினார்???