மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்: போர்நிறுத்தமில்லை என்கிறது இராணுவம்

Read Time:3 Minute, 21 Second

மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்திருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும்இ இது போர்நிறுத்தம் இல்லையென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் பொதுமக்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்தும் கனரக ஆயுதங்கள்இ போர்விமானங்கள் பயன்படுத்தப்படாது எனவும்இ மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக்கொண்டுவரத் தீர்மானித்திருப்பதாகவும் ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “எமது பாதுகாப்புப் படையினர் பொதுமக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தும் கனரக ஆயுதங்கள் மற்றும் வான் தாக்குதல்களை நடத்தமாட்டார்கள்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்இ இதனைப் போர்நிறுத்தமாகக் கொள்ளமுடியாது எனத் தெரிவித்திருக்கும் இராணுவப் பேச்சாளர்இ மக்களுக்கு ஏற்படும் இழப்புக்களைக் குறைக்கும் நோக்கில் இராணுவத்தினர் கனரக ஆயுதங்களையோ அல்லது போர் விமானங்களையோ பயன்படுத்துவதையே நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார மேலும் கூறினார். அரசாங்கப் படைகள் தொடர்ந்தும் பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதுடன்இ கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை மாத்திரம் அவர்கள் தவிர்ப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 தினங்களுக்கு முன்னரே தாம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல்களை நடத்தவில்லையென இராணுவத்தினர் கூறியிருப்பதுடன்இ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களை மீட்கவேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


இலங்கை உறுதிமொழி: இந்தியா

இதேவேளைஇ மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதுடன்இ பொதுமக்கள் தங்கியிருக்கும் பகுதிகளை நோக்கி கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியோ அல்லது விமானங்களைப் பயன்படுத்தியோ தாக்குதல்கள் நடத்தப்படாது என இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருப்பதாக இந்திய உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

எனினும்இ பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடருமென இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பதாகவும் இந்திய உட்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் தமிழக முதல்வர்
Next post புலிபாய்ந்தகல் கூழாங்காடு பகுதியில் வெட்டபட்டிருந்த ஆழமான கிணறு ஒன்றுக்குள் நேற்றுக்காலை தவறி விழுந்த மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு