உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் தமிழக முதல்வர்

Read Time:2 Minute, 38 Second

jaya-karunanidhi200இலங்கையில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படவேண்டுமெனக் கூறி தமிழக முதல்வர் மு.கருணாநிதி மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. திங்கட்கிழமை அதிகாலை அண்ணா நினைவிடத்துக்குச் சென்ற மு.கருணாநிதி திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த இந்திய மத்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கருணாநிதி வலியுறுத்தியிருந்தார். “இன்று கூறிய இலங்கை பாதுகாப்புக் கவுன்சில் மோதல்களை நிறுத்துவது குறித்து ஆராய்ந்துள்ளது என்ற நல்லசெய்தி எனக்குக் கிடைத்துள்ளதால் உண்ணாவிரதப் போராட்டத்தை நான் உத்துடன் முடித்துக் கொள்கிறேன்” என மு.கருணாநிதி ஊடகவியலாளர்களிடம் கூறினார். அதேநேரம்இ உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மு.கருணாநிதியைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடவேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில் இலங்கை விவகாரம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நிலையிலேயே தமிழக முதல்வர் திடீரென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு சில மணி நேரத்திலேயே அதனைக் கைவிட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்றால் இலங்கையில் தனித் தமிழீழம் மலரும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா நேற்றுமுன்தினம் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்தே கலைஞர் மு.கருணாநிதி தனது பங்கிற்கு சில மணித்தியாலங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

3 thoughts on “உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் தமிழக முதல்வர்

  1. “ உண்ணாவிரதம்“
    கதை, வசனம், தயாரிப்பு, மேற்பார்வை
    கலைஞர் முதல்வர் மு.கருணாநிதி.
    விளம்பரம் விநியோகம் குடும்ப அங்கத்தினர்கள்.

    திரையரங்கில் 27. 04. 2009
    சுமார் 7 மணித்தியாலங்கள் மாத்திரம்
    வெற்றி,வெற்றி,வெற்றி,வெற்றி,
    கலைஞர் வாழ்க

  2. HE IS SELECTED TO ASKAR VIRURTHU
    INDIAN SUPER HIT ACTION OLD MAN

    MOVIE :AVALAPPADDA THAMILAN
    ACTOR:KARUNAA NITHI &
    MUSIC: MANMOGAN SINGH

Leave a Reply

Previous post பிரித்தானிய, பிரான்ஸ், சுவீடன் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை விரைவு
Next post மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்: போர்நிறுத்தமில்லை என்கிறது இராணுவம்