புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு மூன்றாம் தரப்பிடம் சரணடைய வேண்டும் -அமெரிக்கா கோரிக்கை

Read Time:1 Minute, 28 Second

புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு மூன்றாம் தரப்பிடம் சரணடைய வேண்டுமென அமெரிக்கா கேட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்றையதினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர் ரொபேர்ட் வூட் இதனைத் தெரிவித்துள்ளார். பொதுமக்களை தடுத்து வைப்பதையும், அவர்களை துன்பத்தில் ஆழ்த்துவதையும் புலிகள் நிறுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு மூன்றாம் தரப்பிடம் சரணடைய வேண்டுமென தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்த பெருந்தொகையான மக்களுக்கு சர்வதேச சமூகம் உதவிகளை வழங்க வேண்டியுள்ளதாகவும், மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் விடயத்தில் சர்வதேச சமூகம் பங்களிப்புச் செய்ய தயாராக இருக்க வேண்டுமெனவும் ரொபேர்ட் வூட் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு மூன்றாம் தரப்பிடம் சரணடைய வேண்டும் -அமெரிக்கா கோரிக்கை

  1. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    பனங்கொட்டை புக்கா விளக்குஎண்ணை பிணக்காட்டு தலைவன் பிரபாகரன் கடத்தின அத்தனை எங்கள் பிள்ளைகளையும் புதை குழிக்குள் அனுப்பி விட்டு புலன் பெயர்ந்தவர்களின் பிழைப்பில் வாங்கிய சாம்செவனை எல்லாம் மண்ணிற்குள் தாட்டுவிட்டு மதிவதனியையும் மகளையும் பத்திரமாக வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு முடிந்தால் கிளிநொச்சியை ராணுவம் பிடித்து காட்டட்டும் என்றெல்லாம் பீலா பிலிம் காட்டிவிட்டு இந்த அரசியல் ராணுவ சூனியம் கையில் வைத்திருக்கின்ற ஒரே திட்டம் கடைசியாக கையை விரித்து யுத்த நிறுத்தம் அறிவித்து தன் உயிரை காப்பாத்த சரண் அடைவதே.

Leave a Reply

Previous post பிரபாகரன் எந்த வழியில் தப்புவார்?
Next post ஜேர்மனி பெர்லின், இலங்கைத் து}தரகம்மீது புலிகளின் ஆதரவாளர்கள் தாக்குதல்