மோதல் பகுதியிலிருந்து வெளியேறும் மக்களுக்கு எவ்வித உதவியும் தேவைப்படவில்லை -பாலித கொஹன

Read Time:2 Minute, 0 Second

மோதல் பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்களுக்கு எவ்வித உதவியும் தேவைப்படவில்லை அவர்கள் தாமாகவே வெளியேறுவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன தெரிவித்துள்ளார். மோதல் பகுதியிலிருந்து மக்கள் வெளியேறும் இடங்களுக்கு ஐ.நாவின் பணியாளர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என ஐ.நா கோரியிருப்பது தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு அவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்திருக்கிறார். ஐ.நா மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்டுள்ளது அவர்கள் பொதுமக்களுக்கு உதவமுடியும் ஓமந்தை மற்றம் வவுனியா இதனைத்தவிர அரசாங்கத்தின் நலன்புரி நிலையங்களிலும்  அவர்கள் இருக்கிறார்கள் இந்நிலையில் முழுமையாக அணுக அனுமதி உள்ளது வெளியேறும் மக்களுக்கு எவ்வித உதவியும் தேவைப்படவில்லை சுயமாகவே வெளியேறுகிறார்கள் என்றும் இது தொடர்பாக தெரிவித்துள்ள அவர் வன்னியில் இருந்து நேற்றுவரை 1லட்சத்து 68அயிரம் பேர்வரை வெளியேறுகிறார்கள் ஏற்கனவே முல்லைத்தீவு அரசாங்க அதிபரினால் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி அங்கு 1லட்சத்து 86ஆயிரம்பேர்வரை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் தற்போது அங்கு சுமார் 20ஆயிரம் பேர்வரை இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்படும்.. அரசாங்கம் தெரிவிப்பு -திவயின தகவல்
Next post போர்ப்பிரதேசம் செல்ல ஐ.நா குழுவை அனுமதியோம்.. பான் கீ மூன் கருத்துக்கு கோத்தபாய எதிர்ப்பு