ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் மீது அக்கறையில்லை -ரணில் விக்கிரமசிங்க

Read Time:2 Minute, 38 Second

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் மீது அக்கறையில்லை என எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார் மேல்மாகாண சபைத்தேர்தலுக்கான இறுதி பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார் சுனாமி பேரழிவின்போது உயிரிழந்த பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் பற்றிய பூரண அறிக்கைகள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார் எனினும் வன்னியில் தற்போது இன்னல்களை எதிர்நோக்கியுள்ள தமிழ் மக்கள் பற்றியோஇடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை குறித்தோ அரசாங்கம் தகவல்களை வெளியிடாமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களுக்கு உரிய மதிப்பளிக்கப்படுவதில்லை என ஐக்கிய நாடுகள் அமெரிக்கா பிரித்தானியா உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புக்கள் அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். இலங்கை அரசாங்கம் எவ்வித குற்றத்தையும் மேற்கொள்ளாவிட்டால் நாட்டு மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட ஏன் தயக்கம் காட்டி வருகின்றதென அவர் கேள்வி எழுப்பியுள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார் எனினும் இடைத்தங்கள் முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்களை பார்வையிடக் கூட எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியளிக்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தமிழர்கள் மீது காட்டிவரும் அக்கறை ஓர் புரியாத புதிராகவே தொடர்வதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் மீது அக்கறையில்லை -ரணில் விக்கிரமசிங்க

  1. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    1983ம் ஆண்டில் அரசாங்க ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கெதிரான இனக்கலவரத்தில் ரணிலுக்கும் பங்கிருந்ததை யாராலும் மறுக்க முடியாது. அன்றைய காலகட்டத்தில் ரணில் அரசாங்கத்தின் ஒரு பலமிக்க அமைச்சராக இருந்தது மாத்திரமன்றி, அவரது மாமனார் உறவுக்காரரான ஜே.ஆர்;. ஜயவர்த்தன தான் அன்றைக்கு நாட்டின் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக இருந்தார். அப்படியான கட்டத்தில் ரணில் ஒரு சாதாரண தலையீட்டைச் செய்திருந்தாலே அந்தக் கலவரத்தை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. தமிழ் மக்களின் அவலங்களையும், படுகொலைகளையும் பார்;த்துக் கொண்டு மௌனமாக இருந்தார்.

    அதற்கு முன்பு 1981ம் ஆண்டு நடைபெற்ற யாழ். மாவட்ட சபைத்தேர்தலின் போது தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைக்கு வேட்டு வைக்கும் விதமான அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டது ரணிலும் அமைச்சராகச் செயற்பட்ட அதே அரசாங்கம் தான். ரணில் போன்றோரின் பலமான ஆதரவுடேனேயே யாழ்ப்பாணப் பொதுநூலகம் தீயிட்டு எரிக்கப்பட்டது. மேற்கண்ட செயற்பாடுகளில் ரணிலின் பங்களிப்பு இல்லாதிருந்தால் அவற்றைக் கண்டித்து ஒரு வார்த்தை தானும் வெளியிட்டிருப்பார். ஆனால் அப்படிச்செய்யவில்லையே.

    ரணில் அமைச்சுப் பதவி வகித்த அரசாங்கத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட 1983ம் ஆண்டின் ஆடிக் கலவரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கான நஷ்டஈட்டை வழங்குவதற்கு ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷ அவர்கள் தான் நடவடிக்கை எடுத்தார். அதற்கு முன்பு கலவரத்தின் பின் சுமார் 11 வருடங்கள் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அப்படியான செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை. அதிலும் அந்தக் காலகட்டத்தி;ல் ரணில் இரண்டு வருடங்கள் மட்டில் பிரதமராகவும் இருந்திருக்கின்றார். அந்த வகையில் மனப்பூர்வமான தேவைப்பாடு இருந்திருந்தால் அவரால் அதனைச் செய்திருக்க முடியும்.

    அதுமட்டுமன்றி 1977ம் ஆண்டு ரணில் அங்கம்வகித்த ஐ.தே.கட்சியினர் ஆட்சி அமைத்ததன் பின்னரான (1993) வரையான காலத்தில் வரலாற்றில் தமிழ் மக்கள் மறக்கமுடியாதவாறான (1977, 1981, 1983 ) ஆகிய மூன்று பாரிய இனக்கலவரங்களை ஏற்படுத்தி நாட்டில் வாழ்ந்த தமிழ் மக்களை பயங்கரவாதிகளான ஆயுதக்குழுவினரின் பின்னால் அணிதிரள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினரே என்பதனை தமிழ் மக்கள் இலகுவில் மறந்துவிட முடியாது.

    இந்நிலையில் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சி அமைத்ததன் பின்னரேயே இலங்கையில் இனக்கலவரம் என்னும் கொடிய நடவடிக்கைகள் இல்லாதொழிக்கப்பட்டது என்பதனை தமிழ்மக்கள் மறுக்கமுடியாது
    குருநகரிலுள்ள தேவாலயம் ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஆட்சியின்போது (05.04.1993) விமானத் தாக்குதல்மூலம் சேதமாக்கப்பட்டது. பின்னர் பயங்கரவாதிகளின் தூண்டுதலின்பேரில் (04.07.2005) இராணுவத்தினருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் எவிவிடப்பட்டு ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஆட்சிக்காலத்தின்போது குருநகரில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம் தமிழ் இளைஞர்களுக்கான பாரிய சித்திரவதை முகாமாக செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது ரணில் பலமிக்க அமைச்சராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தான் வடக்கு-தெற்கின் உறவுப் பாலமாக விளங்கிய யாழ்.தேவி புகையிரதப் பயணத்தை அரசாங்கம் இடைநிறுத்தியது. அதே காலகட்டத்தில் கல்வி அமைச்சராக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க தமிழ்ப் பிரதேச கல்வி வளர்ச்சிக்கென எதுவித சேவையும் ஆற்றியிருக்கவில்லை. குறைந்த பட்சம் தமிழ் மாணவரின் கல்வி நிலை குறித்த கலந்துரையாடல் ஒன்றைக் கூட நடாத்தியிருக்கவில்லை. மேலும் முன்னாள் ஜனாதிபதி டீ.பீ.விஜேதுங்க தமிழ் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூகங்களை மரத்தைச் சுற்றிப்படரும் கொடிக்கு ஒப்பிட்டுப் பேசிய காலகட்டத்தில் ரணில் பிரதமர் பதவியை வகித்துக் கொண்டிருந்தார். அன்றைய காலகட்டத்தில் அது பற்றி ஒரு வார்த்தை கூட அவர் மறுதலித்துப் பேசியதில்லை. அதிலிருந்தே அவரும் அவ்வாறான ஒரு கருத்தை ஆமோதிக்கின்றார் என்பதாகத் தானே அர்த்தப்படுகின்றது?

    ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவியேற்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுள் ஒன்றுக்கு தமிழ் இனத்தவர் ஒருவரை நியமிக்கும் வழக்கம் இருந்து வந்தது. ரணில் பதவியேற்கும் காலத்தில் கட்சியின் பொருளாளராகச் செயற்பட்டவர் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் நகரபிதாவான கே.கணேசலிங்கம் ஆவார். ஆனால் ரணில் கட்சித் தலைமையை ஏற்றபின் கணேசலிங்கம் ஒதுக்கப்பட்டார். கடைசியில் அவர் மனம் வெறுத்து,கட்சியை விட்டே விலகி பொதுசன ஐக்கிய முன்னணியில் இணைந்து கொண்டார்.

Leave a Reply

Previous post பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே பிரபாகரன் மறைந்திருக்கின்றார் -இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பி.பி.சி.க்கு தெரிவிப்பு
Next post சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 22தமிழர்கள் நீர்கொழும்பில் கைது