பாதுகாப்பான இடங்களை நோக்கி பொதுமக்கள் வருகை தந்தமை வரவேற்கத்தக்கது பான் கீ மூன்

Read Time:1 Minute, 32 Second

பாதுகாப்பான இடங்களை நோக்கி அதிகளவிலான பொது மக்கள் வருகை தந்தது வரவேற்கத்தக்க விடயம் என ஜ.நா பொது செயளாளர் பான் கீ மூனின் ஊடக அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மோதல் நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள மக்கள் குறித்து அழ்ந்த கவனம் செலுத்துவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார். அதேவேளை பொதுமக்கள் அதிகளவு வாழும் பகுதிகளின் மீது பாரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்படுவதும் மோதல் இடம்பெறும் பகுதிகளிலிறுந்து பொதுமக்கள் வெளியேறுவதை விடுதலைப் புலிகள் தடுப்பதும் கவலையளிப்பதாகவும் பான் கீ முனின் அவ்அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாக ரொய்டர்; செய்திச் சேவை தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்து புதுமாத்தளன் வலைஞர்மடம் மற்றும் அம்பலவன் பொக்கனை பகுதிகளில் இருந்து 30.000பொதுமக்கள் இராணுவத்திடம் தஞ்சமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

3 thoughts on “பாதுகாப்பான இடங்களை நோக்கி பொதுமக்கள் வருகை தந்தமை வரவேற்கத்தக்கது பான் கீ மூன்

  1. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    முப்பது நாற்பது வருடங்களாக வல்வெட்டித்துறை கடத்தல் வள்ளங்கள் அடிபட்டு பிடிபட்டு போனதெல்லாம் 26ஆம் திகதியில்தான்.
    இதனால் பின்னர் 26ஆம் திகதி ஒரு கேடான திகதி என்று 26ஆம் திகதியில் ஒன்றும் செய்வதில்லை. அண்மையில் கனடாவில் நடந்த வல்வெட்டித்துறை ஒன்று கூடலிலும் 26ஆம் திகதி பிறந்த வேலுப்பிள்ளையின் பொடி எப்பதான் அடிபடபோகுதோ என்று பழைய சம்மாட்டிமார் பயந்தனர். தமிழருக்கு எட்டாம் நம்பர் ஒரு நாளும் சரி வராதாம்.
    பிரபாகரன் தனது புத்தியீனம் படித்தவர்கள் கிட்ட வந்தால் தெரிய வந்து ஊரெல்லாம் பரவி விடுமோ என்ற அச்சத்தில் ஒரு படித்தவனையும் கிட்ட விடவில்லை
    பத்தாம் வகுப்பு படித்த போலீஸ் கான்ஸ்டபில் நடேசனுக்கு பதிலாக சிவா பசுபதி அல்லது வேறு ஏதாவது நன்கு விஷயம் தெரிந்த சாணக்கியமாக கருமம் ஆற்றக்கூடிய ஒருவரை நியமித்திருக்கலாம்
    ஒரு விஷயம் தெரிந்தவனையும் பிரபாகரன் தன்னை மீறி விடிவார்கள் என்று கிட்டவேவிடவில்லை.
    எம் ஜீ ஆர் மூன்றாம் வகுப்பு தான் படித்திருந்தாலும் மெத்தபடித்த பல அனுபவசாலிகளை தன் அருகே எப்போதும் வைத்திருந்தார்.
    பிரபாகரனோ தன்னை பப்பா மரத்தில் ஏத்திய தன்னை சூரிய தேவன், திட்டம் வைத்திருக்கிறார் என்று புளுகிற படிப்பறிவில்லாதவர்களை தன் அருகே வைத்து கொண்டதுடன் கடத்தல் மாபியா பாணியில் ஒன்றில் மண்டையில் போடுவது இல்லையேல் காசு கொடுத்து ஆட்களை வாங்குவது இதை விட்டால் பிரபாகரனுக்கு எதுவும் தெரியாது. சுத்த அரசியல் சூனியம் ராணுவ சூனியம்
    இல்லாவிட்டால் வடக்கு கிழக்கில் இருந்த பொடியளையும் அநியாயமாக புதை குழிக்கு அனுப்பி வடக்கு கிழக்கில் இருந்த பொருளாதாரத்தையும் அடியோடு அழித்து விவசாயிகளின் நெல்லை புசல் முன்னூறு ரூபாக்கு துப்பாக்கி முனையில் வாங்கி அவர்களுக்கு மண்ணெண்ணையை போத்தல் முன்னூறு ரூபாவுக்கு வித்து டிராக்டர் எல்லாத்தையும் பறித்து மீனவரின் போட்களையும் அவுட்போட் எஞ்சின்களையும் வாகனங்களையும் பறித்து ஆமா போடா மறுத்த அத்தனை சமூகத்தின் அறிஞர்களையும் துணுக்காய் சித்திரவதை முகாமில் அடைத்து பரலோகம் அனுப்பி இந்த சூனியம் மொத்தத்தில் வடக்கு கிழக்கில் இருந்தவர்களின் பிழைப்பையும் பிள்ளைகளையும் சூறையாடி இந்தியா கொண்டுவந்த வடக்கு கிழக்கு இணைந்த தீர்வையும் பிரேமதாசாவுடன் சேர்ந்து இல்லாமல் பண்ணி எங்கட காசிலை வாங்கின இத்தனை சாம் செவேனையும் ஒன்று கூட பாவிக்காமல் மண்ணிற்குள் தாட்டுவிட்டு கேம்ஓவர் என்று பங்கருக்குள் இருக்கும் இந்த வங்குரோத்து தலைவன் தமிழரை வங்குரோத்தாக்கி இன்று இலங்கையில் அகதி முகாம்களிலும் வெளி நாட்டில் தெருக்களுக்கும் கொண்டு வந்து விட்டு தானும் இன்றோ நாளையோ வலையன்மடத்திலோ அல்லது கரையாம்முள்ளிவாய்க்காலிலோ செத்தொழிந்து போக வெளிநாடு புலிபினாமிகளுக்கும் இந்தியாவில் படமெடுக்கிற புலிபினாமிகளுக்கும் மில்லியன் கணக்கில் யூரோக்களும் டாலர்களும் ருப்பிகளும் சேர புலிக்கு பணம் கொடுத்தவனும் இலங்கையில் பாதிக்கப்பட்டவனும் அம்போ அதோகதியாக புலி என்ற கதை அழிந்து போகும்.

  2. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் யுத்தப் பிரதேசத்தில் சிக்கியிருக்கின்றார்கள் என்றும் அவர்கள் அங்கிருந்து வெளியேறிப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர விரும்பவில்லை என்றும் கட்டி வளர்க்கப்பட்ட பொய்த் தோற்றமம் சுக்குசுக்காக உடைந்தது.

    புலிகளின் அரசியல்வழி அழிவுகரமானது என்பதை அவர்களைக் கண்மூடித்தனமாக ஆதரித்தவர்கள் இப்போதாவது விளங்கிக்கொள்ள வேண்டும். இனப் பிரச்சினையைச் சிக்கலாக்கியது மாத்திரமல்லாமல் கடைசிக் கட்டத்தில் மக்களின் வாழ்க்கையோடும் விளையாடியிருக்கின்றார்கள். அங்கிருந்து வெளியேறும் சிவிலியன்கள் மீது தாக்குதல் தொடுக்கக் கடைசி நேரத்தில் கூட அவர்கள் தயங்கவில்லை.

    புலிகளின் ஆயுதப் போராட்டப் பாதை தோல்வியடைந்ததும் தங்களைப் பாதுகாப்பதற்காக அவர்கள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதும் பாதுகாப்புப் படையினர் அம் மக்களை மீட்டெடு த்ததுமான நிகழ்வுகள் தமிழ் பேசும் மக்கள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை மீளாய்வு செய்து சரியான தீர்மானத்தை மேற் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

  3. mr saba, inkulla mara mandaijalukku eppidich sonnalum eraathu naankal pulijinta pakuthikkulla irunthu padda kastankal evalavu enpathu emakkuththaan therijum.pulampejarntha semmarijalukku pirabakaran thaan kadavul enru thirjuthukal.ithukalai kadavul thaan kaappatta venum.

Leave a Reply

Previous post வன்னியில் இறுதிக்கட்டமோதலில் சிறுவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் -யுனிசெப் எச்சரிக்கை
Next post கெக்கிராவையில் துப்பாக்கிச்சூடு.. இருவர் வைத்தியசாலையில் அனுமதி