கொணாமுல்லையில் காணாமல் போன இரு சிறுவர்களில் ஒருவரது சடலம் பொலிஸாரால் மீட்பு

Read Time:1 Minute, 59 Second

அக்மீமன நுகேகந்த கொணாமுல்லைப் பகுதியில் காணாமல் போயிருந்த இரு சிறுவர்களில் ஒரு சிறுமியினது சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேற்படி 10 வயதுடைய சிறுமியினது சடலம் காணாமல் போன இரு சிறுவர்களின் வீடுகளுக்கிடையிலுள்ள குப்பைத் தொட்டியிலிருந்தே மீட்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இரு சிறுவர்களும் கடந்த 15 ஆம் திகதி சைக்கிளுடன் காணாமல் போயிருந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளையும் சோதனைகளையும் நடத்திய வேளையிலேயே சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை மற்றும் விசாரணைகளில் பொலிஸார் மோப்ப நாய்களையும் மகளிர் பொலிஸ் பிரிவுகளையும் ஈடுபடுத்தியிருந்தனர். இதன் போது சந்தேகத்தின் பேரில் மூவரிடம் விசாரணை நடத்த ஆரம்பித்த பொலிஸார் நேற்று சனிக்கிழமை காலை நடத்திய சோதனையிலேயே முதலாவது சிறுமியினது சைக்கிளைக் கண்டெடுத்தனர். அதனைத் தொடர்ந்து அவ்விடத்தில் குப்பைகளை தோண்டிய போது காணாமல் போயிருந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இது கொலையாக இருக்கலாமென சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பிரதாபசிங்க சந்தேகம் வெளியிட்டார். இதேவேளைஇ பொலிஸார் விசாரணைகளையும் சோதனைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோதல் நிறுத்தத்தால் பயனில்லை? -கோதபாய ராஜபக்ச
Next post பிரபாகரனை எதிர்க்கிறேன், ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறேன் – ஜெ.ஜெயலலிதா