மக்கள் வெளியேற வசதியாக இருதரப்பும் உடனடி போர் நிறுத்தம் செய்ய வேண்டும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

Read Time:2 Minute, 24 Second

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் போரில் பிடியில் சிக்கியுள்ள மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான முறையில் வெளியேறுவதற்கு வசதியாக இலங்கை அரசங்கமும் தழிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியக போர்நிறுத்தம் ஒன்றை செய்து கொள்ளவேண்டும் என சர்வதேச மன்னிப்புக் சபை அவசர கோரிக்கையினை விடுத்துள்ளது இலங்கை அரசங்கம் அறிவித்த இரண்டு நாள் நிறுத்தம் எந்தவிதமான பலன்களையும் தராமல் முடிவடைந்திருக்கின்றது இந்நிலையில் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள நிலைமைகள் தொடர்பாக அறிந்து கொள்வதற்காக அங்குள்ள மருத்துவ அதிகாகள் இருவரை சர்வதேச மன்னிப்புச் சபை தொடர்பு கொண்டபோது அங்குள்ள மோசமான நிலமைகள் தொடர்பாக அவர்கள் விவரித்துள்ளார்கள் எனவும் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது உணவு மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான விநியோகங்கள் அங்கு போதுமானதாக இல்லாமையால் அவசரமான மனிதாபிமான உதவிகள் அங்கு தேவைப்படுவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்திருக்கிறது போர் தீவிரமடைந்திருந்த வியாழக்கிழமை மட்டும் காயமடைந்த 92பேர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக மருத்துவத்துறைப் பணியாயாளர் ஒருவர் தெரிவித்துள்ளர் புதன்கிழமை 75 பொதுமக்கள் துப்பாக்கிச்சூட்டு காயங்களுக்குள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்த மற்றுமொரு மருத்துவ பணியாளர் இதில் 12பேர் பலியானதாகவும் அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், பொட்டம்மான், சூசை, ரமேஷ், ஜெயம், ரத்தின் மாஸ்டர் போன்ற எஞ்சியிருக்கும் தலைவர்கள் தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் இறுதி மார்க்கமாகவே தப்பியோடும் தமிழ் மக்களை சுட்டுக் கொல்லுமாறு பொட்டுஅம்மான் பகிரங்க உத்தரவு!
Next post உள்ளுராட்சி அதிகார சபை சட்ட மூல வாக்கெடுப்பு மே 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு