புதுடில்லியிலிருக்கும் கூட்டமைப்பினர்..

Read Time:2 Minute, 29 Second
புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நாராயணனுடனான சந்திப்பில் கூட்டமைப்பினர் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். தமிழர்கள் மீது நடத்தப்படும் இராணுவத் தாக்குதல்களை நிறுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம்கொடுக்க வேண்டும், மோதல்கள் நடைபெறாத பகுதிகளிலுள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்குமாறு வலியுறுத்தவேண்டும், மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் சிக்குண்டிருக்கும் 2 இலட்சம் தமிழர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளைக் கூட்டமைப்பினர் முன்வைத்துள்ளனர். எம்.கே.நாராயணனுடனான சந்திப்பைத் தொடர்ந்து வியாழக்கிழமைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இலங்கையில் நடைபெற்றுவரும் யுத்தத்தை நிறுத்தவதற்கு இந்தியா உதவவேண்டும் என இந்தச் சந்திப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து இலங்கையில் அதிகரித்திருக்கும் மோதல்கள் மற்றும் மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் குறித்து விளக்கமளிக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புதுடில்லி சென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீண்ட கால மோதல் நிறுத்தம் சாத்தியப்படாது: அரசாங்கம் மறுப்பு
Next post மக்கள் பிரச்சினைளைக் கண்டறிய ஆனந்தசங்கரி யாழ். விஜயம்