இந்தோனேசியாவில் பாரிய பூகம்பம்

Read Time:1 Minute, 7 Second

indonesia.jpg இந்தோனேசியாவின் யாவா தீவில் இன்று அதிகாலை இடம்பெற்ற 6.2 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சம் 1325பேர் உயிரிழந்திருப்பதாகவும், நு}ற்றுக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாகவும் இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது.
புவியதிர்ச்சியினால் இடிந்து வீழ்ந்த கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாமென அஞ்சப்படுகிறது. ஆயினும் இதனால் சுனாமி ஏற்படவில்லையென்று யகர்த்தாவிலுள்ள பூமியதிர்ச்சி தொடர்பான ஆய்வுநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மட்டக்களப்பில் இராணுவத்தினரின் கழிவு அகற்றும் பவுசர் மீது கிளைமோர் தாக்குதல்
Next post கருணா தரப்பு ஆயுதங்களைக் களைய வேண்டிய அவசியம் எமக்கில்லை – வெளிவிவகார அமைச்சர்