உறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்? (அவ்வப்போது கிளாமர்)

Read Time:2 Minute, 10 Second

இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதிகப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணுடைய உடல், கலாச்சாரம், அறிவு, மனநிலை, சிந்தனை ஆகியவற்றை முழுமையாக உணர்ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவனுக்கு ஒரு நல்ல உயர்ந்த மருந்து என்று கூறியுள்ளார். அதாவது இதன் பொருள், ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும். மீதி மாத்திரை, மருந்துகள் எல்லாம் நம்முடைய பதட்டத்தை குறைக்கும் அவ்வளவு தான்.

சிறுநீர், மலம் ஆகியவற்றை எப்போதும் அடக்கும் பழக்கம், உள்ளாடைகளை இறுக்கமாக அணிவது, எப்போதுமே குப்புறப் படுத்துக் கொள்வது, மனதை பலவிதங்களிலும் அலைய விடுவது, கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பது, பெண்களை நிமிர்ந்து பார்க்கக் கூட வெட்கம் அல்லது அச்சம் கொள்வது, செக்ஸ் புத்தகங்களையே படித்துக் கொண்டிருப்பது, செக்ஸ் திரைப்படங்கள் பார்ப்பது, அழகான பெண்களின் மீது இச்சை கொண்டு விந்தை வீணாக்குவது, தனக்கு ஆண்மைக் குறைவோ என்று நினைத்து அதிகம் வருந்துவது போன்றவற்றால் உடலுறவு கொள்ள இயலாத நிலை ஏற்படும்.

இன்னொரு விஷயம், ஆணோ, பெண்ணோ, தங்கள் உடலைப் பிறந்த மேனிக்குத் திறந்து போட்டுக்கு கொண்டு தனியறையில் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் பழக்கம் அல்லது குளியலறையில் பிறந்த மேனியுடன் குளிப்பது ஆகியவை கூட உடல் இச்சைக் குறைவை ஏற்படுத்தி விடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஷூ சாக்ஸ் எது சரி? எது தப்பு? (மருத்துவம்)