முகப் பொலிவை மேம்படுத்தும் நவீன சிகிச்சை முறைகள்!! (மருத்துவம்)
வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நாம் கண்ணாடியை பார்க்கும்போது, வயதானதற்கான இயற்கையான அறிகுறிகள் தென்படும். அவற்றை தவிர்ப்பது மிகவும் கடினம். உதாரணமாக, முக சுருக்கங்கள், வயது காரணமாக முகத்தில் தோன்றும் புள்ளிகள், தொய்வடைந்த தோல் இப்படி பலவற்றை சொல்லலாம். ஆனால், இன்று உடலழகை மீட்டெடுத்து, இளமையான தோற்றத்தில் தோன்ற வைக்கும் நவீன சிகிச்சை முறைகள் பல வந்துவிட்டன. இது குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ‘ஜெருஷ்’ முகம் மற்றும் உடல் அழகுலேசர் சிகிச்சை மையத்தின் தலைமை மருத்துவர் சி.பிளாட்பின்.
முக சுருக்கங்களை சரி செய்யும் சிகிச்சை..
நெற்றி மடிப்புகள், புருவ கோடுகள் போன்றவற்றினை சரி செய்ய போடோக்ஸ் ஊசி ( Botulinum toxic) மூலம் சரி செய்துவிட முடியும். இந்த ஊசி முகத்தின் தசைகளை தளர்த்திஸ மூன்றில் இருந்து ஏழு நாள்களில் நிரந்தர தீ்ர்வு தருகிறது.
தோலழற்சியை நீக்க..
தோலின் வெளிப்புற அடுக்குகளில் இருந்து பழைய இறந்த செல்லை அகற்ற தோல்கள் ஒரு அமிலக் கரைசலைப் பயன்படுத்துகிறது. அவை, லாக்டிக் அமிலம், கிளைகோலிக்
அமிலம், சாலிசிலிக் அமிலம், பீனால் அல்லது டிசிஏ ( ட்ரைக்லோ அசிட்டிக் அமிலம்) ஆகியவையாகும். இது தோலின் வெளிப்புற அடுக்குகளில் பழைய இறந்த செல்களை நீக்கிவிட்டு, பிறகு ஒரு புதிய மென்மையான தோலை உருவாக்குகிறது. இந்த சிகிச்சையினை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது, வயது முதிர்வால் முகத்தில் ஏற்படும் புள்ளிகள், கோடுகள், சூரிய கதிர்களால் தாக்கப்பட்டு சேதமடைந்த தோல்கள், வடுக்கள் போன்றவற்றை சரி செய்து பொலிவான தோற்றத்தை தருகிறது.
அப்லேட்டில் லேசர் சிகிச்சை
இது தோல் அடுக்கின் கீழ் சென்று, புதிய கொலாஜனை உருவாக்க உதவுகிறது. இதன்மூலம் தோல் உறுதித் தன்மையை மீண்டும் பெறுகிறது. மேலும், மெலஸ்மா எனும் சூரிய ஒளியினால் கருமையடைந்த தோல்களையும், கன்னங்களில் பழுப்பு நிறத்தில் தோன்றும் திட்டுகளையும் கவனிக்காமல்விடும்போது, சருமம் பெரியளவில் பாதிப்படையும். இந்நிலையில் அப்லேட்டிவ் லேசர் சிகிச்சை மேற்கொள்ளும்போது, சிகிச்சையின் ஒருசில அமர்வுகளிலேயே பெரிய வித்தியாசத்தை காணமுடியும்.
தேவையற்ற முடிகளை நீக்கும் லேசர் சிகிச்சை
டையோடு லேசர் சிகிச்சை. இது முடி அகற்றுதல் முக்கியமாக தேவையற்ற முடிகளை நிரந்தரமாக அகற்றும் சிகிச்சையாகும். வேக்சிங், த்ரெடிங், ட்வீசிங், பிளக்கிங், ஷேவிங், ப்ளீச்சிங் போன்றவற்றிலிருந்து இது நவீன சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சையின் மூலம், தேவையற்ற முடிகளை சுலபமாக எளிதில் நவீன முறையில் நீக்கிவிட முடியும். உதாரணமாக, முகம், கன்னம், கால்கள், மார்பு, வயிறு, முதுகு, அக்குள் மற்றும் பிகினி கோடு உட்பட உடலின் அனைத்து பொதுவான பகுதிகளையும் அகற்ற இதைப் பயன்படுத்தலாம். இது வலியற்ற மற்றும் நிரந்தரமான சிகிச்சை முறையாகும். இதன்மூலம், சருமத்தை மென்மையாகவும் மேம்படுத்துகிறது.
தோல் நிரப்பி(Dermal fillers) சிகிச்சை
இந்த தோல் நிரப்பிகள் சிகிச்சை ஊசி மூலம் செலுத்தக்கூடியது. இது தோலுக்கு அடியில் செலுத்தப்பட்டு, இந்த மென்மையான சருமத்தை மீண்டும் பெற உதவுகிறது. உதாரணமாக, சருமத்தில் உள்ள கோடுகள், மடிப்புகள், குழிகள் போன்றவற்றை சமநிலைப்படுத்தவும், மெல்லிய உதடுகளை குண்டாக மாற்றவும், முக வரையறைகளை மேம்படுத்தவும், முகப்பருவினால் ஏற்பட்ட வடுக்களை சரிசெய்யவும் உதவுகிறது. இந்த சிகிச்சை மேற்கொள்ளும்போது, தோற்றத்தை இயற்கையான பொலிவுடன் மேம்படுத்துகிறது.
பிலேட்லெட் ரிச் பிளாஸ்மா (PRP- Platelet rich Plasma) சிகிச்சை
இந்த பிலேட்லெட் ரிச் பிளாஸ்மா சிகிச்சை முறை வாம்பயர் ஃபேஷியல் என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலானவர்களின் வரவேற்பை பெற்ற சிகிச்சை முறையாகும். இது முக புத்துணர்ச்சியை மேம்படுத்தும் சிகிச்சை முறையாகும். உதாரணமாக, கொலாஜன் உற்பத்தி மற்றும் செல் இடப்பெயர்வு ஆகியவற்றை தூண்டி, சருமத்தில் ஏற்படும் கோடுகள், மடிப்புகள், முகப்பரு, வடுக்கள், சுருக்கங்கள் போன்றவற்றை அகற்ற உதவுகிறது. இந்த சிகிச்சைமுறையானது. ஒருவரின் சொந்த பிளாஸ்மாவை கொண்டு செய்யப்படும் சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறையை மேற்கொள்ளும்போது, இளமையான தோற்றத்தை மீட்டெடுக்க உதவுகிறது.
நுண்நிறமி ( Micro Pigmentation and micro blading)
இது முகம், உதடுகள், கண் இமைகள் மற்றும் புருவங்களின் செயற்கை உருவாக்கத்திற்கு உதவுகிறது. மேலும் தோலின் நிறத்தை நிரந்தரமாக அதிகரிக்க உதவுகிறது. மேலும், இது சருமத்தின் முதல் அடுக்கு மற்றும் ஆழமான அடுக்குகளில் சென்று நிறமிகள் மிக நுணுக்கமாக செயல்படுகிறது. இதன்மூலம், குறைபாடுள்ள புருவம், உதடுகள் போன்றவை மைக்ரோ நிறமி முறையில் செயற்கையாக வடிவமைக்கப்பட பயன்படுகிறது.
ஸ்டெம் செல் தெரபி (Regenera Activa)
ஸ்டெம் செல் என்பது நம் உடலின் ஆதார செல்கள் ஆகும். இந்த ஸ்டெம் செல்களை பயன்படுத்தி செய்யும் சிகிச்சை முறையே ஸ்டெம்செல் தெரபியாகும். இதன் மூலம், முடியுதிர்வு பிரச்னை மற்றும் முடி வளர்ச்சி ஆகியவற்றை மிக எளிதாக சரி செய்ய முடியும். இதுபோன்று மேலும் பல நவீன சிகிச்சை முறைகள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தும்போது, இழந்த இளமையை மீட்டெடுத்து, அழகான தோற்றத்தை பெறமுடியும் என்றார்.