நோய்களை விரட்டும் வண்ணங்கள்!! (மருத்துவம்)
நவீனங்கள் பெருகப் பெருக விதவிதமான நோய்களும் பெருகிக் கொண்டே இருக்கிறது. நோய்களுக்கான சிகிச்சை முறைகளும், பல தெரபி வகைகளும் கூடவே அவ்வப்போது புதுசு புதுசாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஒன்றுதான் சில வண்ணங்களைக் கொண்டு சில நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் கலர் தெரபி. இந்த கலர் தெரபியை க்ரோமோ தெரபி என்றும் சொல்லப்படுகிறது. சமீபகாலமாக செய்யப்பட்டுவரும் இந்த க்ரோமோ தெரபி குறித்து தெரிந்து கொள்வோம்:
இந்த கலர் தெரபியானது கண்களின் உதவியுடன் செய்யப்படுவதால், இந்த தெரபி செய்யும்பொழுது கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. மேலும், இந்திய ஆயுர்வேத மருத்துவத்தின்படி, குறிப்பிட்ட நிறங்கள், நமது உடலின் சக்கரங்களைத் தூண்டி அவற்றின் ஏற்றத்தாழ்வைச் சரிசெய்யும் என்றும் இதன்மூலம் நம் மனநிலையை மேம்படுத்தவும், ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் முடியுமென நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த கலர் தெரபியை பொருத்தவரை, மருத்துவ முறைக்கு மாற்றாக அமைவது அல்ல. ஒருவர் தனது உடல்ரீதியான பிரச்னைகளுக்கு பல விதமான மருத்துவ சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருவதோடு சேர்த்து இந்த கலர் தெரபியையும் மேற்கொள்ளலாம். இந்த கலர் தெரபி பலன் ஆனது ஒவ்வொருவருக்கும் அவரவர் பிரச்னைக்கு ஏற்ப வேறுபடுகிறது. பலருக்கும் இந்த கலர் தெரபி நல்ல பலனைக் கொடுத்துள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
அதுபோன்று, ஒரு சில வியாதிகளுக்கு நமது எண்ணமே காரணமாக அமைகிறது. அந்த எண்ணம் சார்ந்த வியாதிகளுக்கு, சில நிறங்களைக் கொண்டு மூளையில் சில ரசாயனங்களை சுரக்க வைத்து அந்த வியாதிகளை விரட்டவும் கலர் தெரபி உதவுகிறது.கலர் தெரபியில் வானவில்லில் உள்ளது போன்று பலவிதமான நிறங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிறங்களின் கலவை ஏனென்றால், ஒவ்வொரு நிறம் ஒவ்வொருவருக்கு பிடிக்கும் அல்லது ஒவ்வொரு நிறம் ஒவ்வொருவருக்கு ஒருவிதமான அதிர்வலைகளை ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது.
உதாரணமாக. சிலருக்கு நீலம் மிகவும் பிடிக்கும். சிலருக்கு நீலம் பிடிக்காது. சிலருக்கு சிகப்பு என்றால் மிகவும் பிடிக்கும். சிலருக்கு சிகப்பு அலர்ஜியாக இருக்கும். இப்படி ஒவ்வொருவருக்கும் நிறத்தின் மீதுள்ள ஈர்ப்பு மாறிக்கொண்டே இருக்கும். இப்படி ஒருவருக்கு எந்த நேரத்தின் மீது எப்படி ஈர்ப்பு உள்ளது என்பதை அறிந்து அதற்கு தகுந்தவாறு சிகிச்சைகள் அளிக்கப்படும்.
இந்த சிகிச்சைகள் மசாஜ் முறையில் இருக்கும். ஒவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு விதமான சிகிச்சை முறைகள் உள்ளது. எனவே, அந்தந்த நிறங்களுக்கு ஏற்றாற்போல் சிகிச்சைகள் அளிக்கப்படும்.
கலர் தெரபி செயல்படும் விதம்
மனிதர்களின் அனைத்து உறுப்புகளுக்கும் ஒரு குறிப்பிட்ட ஆற்றல் அதிர்வெண் உள்ளது. உறுப்புகள், சில ஆற்றல் மட்டங்களில் சிறப்பாகச் செயல்படுகின்றன. எனவே, இந்த அதிர்வெண் நிலைகள் நோய் அல்லது பாதிப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.அந்தவகையில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான குணநலன்கள் இருக்கும். அந்த குணநலன்களை மனதில் கொண்டு, அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்னைகளுக்கு ஏற்றவாறு நிறங்கள் மற்றும் சிகிச்சைகள் மாறுபடும்.
உதாரணத்திற்கு நீலம் மற்றும் பர்ப்பிள் ஒளியானது கிருமிநாசினியாகவும் மனதை அமைதிப்படுத்தவும் பயன்படுகிறது. பச்சை நிறமானது உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதற்கு பயன்படுகிறது. மஞ்சள் நிறமானது லிம்படிக் சரி செய்ய பயன்படுகிறது. இப்படி ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு விதமான பயனை கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:
சிவப்பு: சிவப்பு நிறத்தை ஆற்றல் தூண்டுதலாக கூறுகின்றனர். உடல் சோர்வுற்றவர்களுக்கு ஆற்றலை அதிகரிக்க அவர்கள் துடிப்பான வண்ணங்களைப் பயன்படுத்துகின்றனர். ரத்த ஓட்ட கோளாறுகள், பக்கவாதம் மற்றும் வாத நோய்களுக்கு சிவப்பு வண்ண சிகிச்சை பலனளிக்கிறது.
நீலம்: நீல நிறம் வெவ்வேறு மனநிலையை மேம்படுத்துவதோடு, பல்வேறு உறுப்புகளுக்கு ஒரு இனிமையான உணர்வை கடத்துகிறது. தலைவலி, மன அழுத்தம், மனச்சோர்வு, தூக்கமின்மை, நரம்பு உறுதியற்ற தன்மை, சியாட்டிகா மற்றும் பிற அழற்சி நிலைகளுக்கு நீல நிறம் பயன்படுகிறது.மஞ்சள்: மஞ்சள் நிற சிகிச்சையானது ஒருவரின் மனநிலையை மேம்படுத்தி மகிழ்ச்சியின் உலகிற்கு அழைத்துச் செல்கிறது. மேலும், கவலை, மன அழுத்தம் மற்றும் மூச்சுக்குழாய் சிரமங்களுக்கு நன்மையளிக்கிறது.
பச்சை: இயற்கையின் தாக்கம் கொண்ட நிறமான பச்சை நிறம், மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது . பதட்டமான நரம்புகளை உடனடியாக அமைதிப்படுத்தும் தன்மை பச்சை நிறத்திற்கு உண்டு.ஆரஞ்சு: ஆரஞ்சு நிறம் மகிழ்ச்சியான உணர்ச்சி, பசி மற்றும் மன செயல்பாட்டைத் தூண்டுகிறது.