தலையணை இல்லாமல் தூங்கப் பழகுங்கள்!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 58 Second

தலையணை இல்லாமல் தூங்குபவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். ஏனென்றால் இங்கு தலையணை வைத்து தூங்குவதை நம் மரபாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சிலர் தலைக்கு இரண்டு தலையணை வைத்து தூங்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள்.இன்னும் சிலர் காலுக்கு ஒரு தலையணை, பக்கத்தில் கட்டிப்பிடித்து படுக்க தலையணை என வித, விதமாக தூங்குவதற்கு தலையணை வைத்திருப்பார்கள். இப்படியான தலையணையே இல்லாமல் தூங்குவதில் நமக்கு எவ்வளவு ஆரோக்கியம் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம்.

தண்டுவடம்

தலையணை இல்லாமல் தூங்குபவர்களுக்கு தண்டு வடம் அதன் இயல்பான நிலையில் இலகுவாக இருக்குமாம். இதனால் உடல்வலி, தண்டுவட பிரச்னை துளி கூட ஏற்படாதாம். உயரமான தலையணை பயன்படுத்தும் போது படுக்கை நிலைகுலைந்து போகும். இதனால், தண்டுவடம் பாதிக்கும். தலையணை இல்லாமல் தூங்கினால் தோள்பட்டை கழுத்து வலியும் கூட வராது. தலையணை இல்லாமல் தூங்கும்போது, உடலின் எலும்புகளை சீராக்க முடியும்.

முகச்சுருக்கம்

தலையணை இல்லாமல் தூங்குபவர்களுக்கு முகச்சுருக்கம் ஏற்படாது.

தோள்பட்டை பிரச்னை

தலையணை இல்லாமல் தூங்கும்போது, சிலர் நேராக படுத்து தூங்குவார்கள். அவர்களுக்கு மெல்லிய தலையணையே சிறந்தது. இது கழுத்து, தலை, தோள்பட்டை பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும். சிலர் ஒருக்களித்து அதாவது ஒருபக்கமாக படுப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இவர்களுக்கு அடர்த்தியான தலையணை வைத்து படுத்தால் தோள்பட்டை, காலுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துமாம்.

இடுப்பு வலி

குப்புறப்படுத்து தூங்குபவர்களுக்கு தட்டையான தலையணையே நல்லது. இது நம் தலையின் நிலையை அசெளரியமாக உணராமல் இருக்க உதவி செய்வதோடு, முதுகு, இடுப்பு வலியையும் விரட்டியடிக்கிறது. ஆனால், தலையணை இல்லாது தூங்கினால் நாம் நோய்களை விரட்டிவிட முடியும். சிலருக்கு மருத்துவர்கள் தலையணை வைத்து தூங்க பரிந்துரைத்து இருப்பார்கள். அவர்கள் மட்டும் தலையணை வைத்து தூங்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நாடகமே எனது உலகம்!! (மகளிர் பக்கம்)
Next post செம்பருத்தி பூக்களின் மருத்துவ குணங்கள்!! (மருத்துவம்)