உடல் நலம் காக்கும் ஜலநெட்டி சூத்ர நெட்டிஜவ்வரிசியின் நன்மைகள்!!! (மருத்துவம்)
ஒவ்வொருவரும் வேண்டுவது ஒளி பொருந்திய கண்கள்; அழகிய தேகம்; சீரான மற்றும் சுத்தமான சுவாசம், நிலையான மற்றும் சமமான ரத்த ஓட்டம்; உடல் ஆரோக்கியம் சேர்க்கும் நல்ல செரிமானம். முறையான மற்றும் முழுமையான கழிவுகள் வெளியேற்றம்; திடமான உடல்; என்றும் எவ்வயதிலும் இளமை; வளமான உடல், மனம் இவற்றில் ஆரோக்கியம் நோய் இல்லா நீண்ட ஆயுள்; அமைதியான சுற்றுப்புறத்துக்கு ஏற்ற நல் வாழ்வு. சோம்பல் இல்லா சுறுசுறுப்பான செயல் வலிமை; நல்ல எண்ணங்கள்; முதுமையிலும் இன்பம் இளமை; இளமையிலும் நன்மை; வளமை, இவையெல்லாம் பெற யோகாவின் ஜலநெட்டி மற்றும் சூத்ர நெட்டி வழிகாட்டுகிறது.
தேவையான பொருட்கள்
1.ஜல நெட்டி பாட் அல்லது மூக்குக் குவளை
2.சூத்திர நெட்டி அல்லது ரப்பர் குழாய்
3.வெது வெதுப்பான குறைந்த சூடு உள்ள சுத்தமான நீர் ஒரு லிட்டர்
4.ஒரு தேக்கரண்டி கல் உப்பு
5.பனியன் துணி அல்லது மெல்லிய துண்டு.
செய்முறை
ஒரு லிட்டர் கொள்ளவு உள்ள பாத்திரத்தில் மிதமான வெந்நீர் (வெது வெதுப்பான – கையில் தொடக்கூடியது) ஊற்றுங்கள். அதில் ஒரு ‘டீ ஸ்பூன் அளவுள்ள கல் உப்பை போடவும்; நன்றாக உப்பு கரையும் வரை கலக்கவும். இப்பொழுது உப்பு கலந்த இதமான சுடு நீர் தயார். இதனை Luke warm என்பர்.பின்; ஜல நெட்டி பாட் அல்லது மூக்குக் குவளையை எடுத்துக்கொள்ளுங்கள். அகன்ற வாய் பகுதியில் நீரை ஊற்றுங்கள்.
மூக்குக் குவளையின் குறுகிய வாய் பக்கத்தை வலது மூக்கில் மெதுவாக; அழுத்தம் இல்லாமல் பொருத்துங்கள். இப்பொழுது குவளையில் உள்ள நீர் வலது நாசியிலிருந்து, இடது நாசிக்கு, குழாயில் நீர் வருவது போல் வரும்; வலது மூக்கு குவளையில் முழுவதும் வடியும் வரை விட்டு விடுங்கள். பின் இதே மாதிரி இடது நாசியில் உப்பு கலந்த வெது வெதுப்பான நீர் நிரப்பப்பட்ட மூக்குக் குவளையில் பொருத்துங்கள். இப்பொழுது இடது நாசியிலிருந்து வலது நாசிக்கு சுடுநீர் கசிந்து குழாயில் நீர் வடிவது போல் வரும். இம்மாதிரி 1 லிட்டர் வெதுவெதுப்பான நீரை நாசியில் இடம் வலமாக உபயோகப்படுத்துங்கள்.
இப்பொழுது, கபாலபதி பஸ்திரிகா நாடி சோதனா பிராணாயாமத்தை செய்யுங்கள். இப்பொழுது சளி ஒரு துளி நனையும் அளவுக்கு வரும் மூக்கில் இப்பொழுது உங்கள் சுவாசம் மென்மையாகச் செல்வதை உணர்வீர்கள்.
சூத்திர நெட்டி செய்யும்முறை
ரப்பர் ட்யூப் (Flatus tube and IR Catheter No 3) ரப்பர் ட்யூப்பை எடுத்துக் கொள்ளுங்கள். பின் ரப்பர் ட்யூப்பின் ஒரு நுனியை பிடித்து இடது பக்க மூக்கில் நாசியில் மெதுவாக உள்ளே செலுத்துங்கள். இப்பொழுது Anterior Palatine Foramen இது Nespaltine என்கிற நாசோபார்னக்ஸ் வழியாக வாய்க்கு வரும். இதை வலது கையின் இரண்டு விரல்களை வாயில் விட்டு மெதுவாக வெளியே அதன் நுனியை வாயிலிருந்து வெளியே எடுங்கள். இப்பொழுது நாக்கு வழிப்பது போல் ரப்பர் டியூப் படத்தில் காட்டியது போல் மேலே இழுத்தும், கீழே வாயின் உள்ளே செலுத்தியும் செய்யவும். இதனால் நாசோபார்னக்ஸ் துவாரம் சீராகவும் பெரிதாகவும் வர உதவும். இதனால் சுவாசம் மூக்கிலிருந்து நுரையீரலுக்கும் செல்லும். காதுக்குச் சமமான காற்று அழுத்தத்தை கொடுக்கிறது.
இப்பொழுது மூக்கின் சுவாசம் சீராகவும், தடையின்றி வர ஏதுவாகும்.ஜல நெட்டியின் மேம்பட்ட நிலையே சூத்திர நெட்டி. இதனால் ஜல நெட்டி 6 மாதம் முறையாக செய்து பின் சூத்திர நெட்டிக்கு வரவும். இது அனுபவ பூர்வமான விஞ்ஞானமான உண்மை.
ஜலநெட்டி: சூத்திர நெட்டி செய்யும் வயது
ஜல நெட்டி ஒரு வயதிலிருந்து செய்யலாம். சூத்திர நெட்டி 14 வயதிலிருந்து செய்ய வேண்டும். மேலும் நல்ல அனுபவம் உள்ள யோக நிபுணரின் மேற்பார்வையில் செய்தால் மேலும் நன்மை உண்டாகும்.
ஜலநெட்டி சூத்திர நெட்டி நன்மைகள்
1.மூக்குத் துவாரங்களில் தூசி; மகரந்தம்; இவைகளினால் அசுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.
2.மூக்கு துவாரங்களை சுத்தம் செய்து; சுவாசப் பிரச்சினைகளாக ஆஸ்துமா, ஹே காய்ச்சல் வராமல் செய்கிறது.
3.மூக்கில் அதிகப்படியான சளி இருக்கும் இடமான
அ.நெற்றி கண் பொட்டு
ஆ.எத்தோமோட் (நாசியின் பின்பக்கம்)
இ.ஸ்போநைடு (நாசியின் மறு பக்கம்)
ஈ.மேக்ஸ்ல்ரி எனும் கண்ணம் என்னும் சளியை அகற்றுகிறது.
4.ஒவ்வாமையை நீக்குகிறது.
5.மூக்கின் வறட்சியை நீக்கி ஆரோக்கியமாக வைக்கிறது.
6.பதற்றத்தை நீக்குகிறது.
7.சுவை, வாசனையை இவை நன்கு அறிய உதவுகிறது.
8.குறட்டை விடுவதை நீக்குகிறது.
9.நல்ல தூக்கத்தை கொடுக்கிறது.
10.சளி மற்றும் தடுமல் போன்ற அறிகுறிகளை நீக்குகிறது.
11.ஜலதோஷத்தை தடுக்கிறது.
12.முகத்தை மலர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
13.ரத்த ஓட்டம் சீராக்குகிறது.
14.செரிமானம் நன்கு செய்ய உதவுகிறது.
15.உடல் கழிவுகளை பூரணமாக வெளியேற்றி உடம்பினை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது.
16.கண் பார்வை தெளிவு பெற செய்கிறது.
17.காது கேட்கும் திறன் உண்டாக்குகிறது.
18.வேலையில் சுறுசுறுப்பை உண்டாக்குகிறது.
19.சோம்பல் நீக்குகிறது.
20. சுறுசுறுப்பையும், களைப்பை போக்கி உற்சாகத்தையும் ஊட்டுகிறது.