குங்குமப்பூ!! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 4 Second

நல்ல நறுமணத்துடன் கூடிய ஒரு சுவையான மற்றும் விலை உயர்ந்த மசாலாவாக இருந்து வருகிறது குங்குமப்பூ. இது மட்டுமின்றி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. புற்றுநோய் உட்பட பிற நாட்பட்ட நோய்களை எதிர்த்துப் போராடும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த குங்குமப்பூ நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த பல வழிகளில் உதவுகிறது. குங்குமப்பூ தரக்கூடிய பிற ஆரோக்கிய நன்மைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.

* குங்குமப்பூ உடலுக்கு சக்தியையும், மனதிற்கு உற்சாகத்தையும் தரும்.

* வாயுத் தொல்லைகளை போக்கும். சிறுநீரகக் கற்களைக் கரைக்கும். விஷ முறிவுகளுக்கும் பயன்படுகிறது.

* குங்குமப்பூ முகத்தின் கரும்புள்ளிகளை அகற்றி முகத்தை பளபளக்க வைக்கும்.

* இழுப்பு, இசிவை போக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு எனும் அதிக ரத்தப் பெருக்கை கட்டுப்படுத்தும்.

* குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி பறந்து போய் விடும்.

* கண்கள் அதிக உஷ்ணத்துடன் சிவந்தும், எரிச்சலுடன் காணப்பட்டால் ஒன்றிரண்டு குங்குமப்பூவை தாய்ப்பால் கலந்து சில சொட்டுகள் கண்ணில் விட்டால் கண்கள் குளிர்ச்சியடையும். கண் எரிச்சல் குறையும்.

* குங்குமப்பூவை பாலில் இட்டுக்காய்ச்சி கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால், குழந்தைகள் அழகாக பிறப்பதுடன், பிரசவ வலியும் அதிகமிருக்காது.

கர்ப்பிணிகள் வெற்றிலைகளில் குங்குமப்பூவை வைத்தும் சாப்பிடலாம்.

* குங்குமப்பூ கருப்பை கோளாறுகளை நீக்கும். மாதவிடாய் வலிகளை போக்கும்.

* குங்குமப்பூவுடன் தேன் கலந்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களை குணமாக்கி சுவாசத்தை எளிதாக்கும்.

* குங்குமப்பூ 300-500 மில்லி கிராம் எடுத்து தூள் செய்து அதை கற்கண்டுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன், மனமும் உற்சாகமடையும்.

* அம்மை நோய் கண்டுள்ளவர்கள் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் அம்மை நோய் குணமாகும்.

* குங்குமப்பூ 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு நீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மில்லி அளவு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால், தலைவலி, மூக்கில் நீர் பாய்தல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக்குறை போன்றவை நீங்கும். உடலில் ரத்தம் பெருகும். தோல் பளபளப்பாகும்.

* குங்குமப்பூ 4 கிராம் எடுத்து, அதை 500 மில்லி தண்ணீர் விட்டு காய்ச்சி 200 மில்லியாக வற்றியதும், குடித்து வந்தால் மந்தத்தை நீக்கி பசியை உண்டாக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..? (அவ்வப்போது கிளாமர்)
Next post கூந்தலை போஷாக்காக பராமரிக்கும் நெல்லிக்காய்!! (மகளிர் பக்கம்)