இதய அடைப்பை நீக்கும் வழிகள்! (மருத்துவம்)

Read Time:2 Minute, 58 Second

இயற்கையில் தயாரிக்கப்படும் அருமையான மருந்து. இதயம் பலப்பட குறிப்பாக இதயம் தொடர்பான நோய் வரவே வராது. தினமும் மிக எளிதான உடற்பயிற்சியான நடைபயிற்சி இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதயம் பலப்பட ஒரு நாளைக்கு குறைந்தது அரைமணி நேரமாவது மிதமான வேகத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இதனால் ரத்த குழாயில் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.
வெங்காயத்திற்கு ரத்தத்தை நீர்மைப்படுத்தும் குணமும் கொழுப்பை கரைக்கும் குணமும் உண்டு. எனவே, தினமும் 25 கிராம் முதல் 50 கிராம் வரை வெங்காயத்தை உட்கொள்வதன் மூலம் சுருங்கிய இதய வால்வுகளில் ரத்தம் எளிதாக சென்று வர உதவுவதுடன் கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்பை கரைத்து இதய வால்வின் அடைப்பையும் குணப்படுத்தும்.

தினமும் 5 பல் பூண்டினை பாலில் கலந்து பருகி வர இதய வால்வுகளில் உள்ள அடைப்பு நீங்குவதோடு மீண்டும் ரத்தக் குழாயில் அடைப்பு வராமலும் தடுக்கலாம்.இதய வால்வு அடைப்பு நீங்க ஒரு கப் எலுமிச்சை சாறு, ஒரு கப் பூண்டு சாறு, ஒரு கப் இஞ்சி சாறு, ஒரு கப் ஆப்பிள் சீடர் நான்கையும் சம அளவில் எடுத்து 60 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். நான்கு பங்கு மூன்றாக மாறியதும் இறக்கி ஆறவிட வேண்டும். பின்னர், சம அளவில் தேனை சேர்த்து ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொண்டு, நாள்தோறும் காலை உணவிற்கு முன் ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டால் இதய அடைப்பில் இருந்து விடுபடலாம்.

தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டுவந்தால் இதயவால்வு அடைப்பு பிரச்னையில் இருந்துவிடுபடலாம்.இதய வால்வு அடைப்புக்கு இஞ்சி ஒரு நல்ல மருந்து. இஞ்சி சாறினை தினமும் அருந்தினால் இதய வால்வு அடைப்பு நீங்கும். இஞ்சி சாறுடன் தேன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post காமம் என்பது என்ன? (அவ்வப்போது கிளாமர்)
Next post ஏப்பம் வருவது ஏன்? !! (மருத்துவம்)