நகங்கள் பளபளக்க…!! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 20 Second

* வேலைகள் செய்து முடித்தவுடன் மருதாணி இலையுடன் சங்கு புஷ்பங்களை அரைத்து இரவிலோ அல்லது குளிக்கும்முன் நகங்களில் பூசிவர நகங்கள் உடைவது குறையும்.

* அகத்திக்கீரையுடன் சிறிது சுண்ணாம்பு தண்ணீரை சேர்த்து அரைத்து நகங்களைச் சுற்றி பற்று போட்டாலும் நகம் உடையாது.

* நகங்கள் சொர சொரப்பாகாமல் இருக்க நல்லெண்ணெயில் மசாஜ் செய்யலாம்.

* கால்சியம் நிறைந்த உணவுகளான பொன்னாங்கண்ணி கீரை, முளை கட்டிய தானியங்கள், சம்பா ரவை, சுண்டைக்காய், ஆப்பிள், மாதுளை, அத்திப்பழம், கோவைக்காய், கொய்யா ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் நகம் பளபளப்பாகவும் உடையாமலும் இருக்கும்.

– மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

வீட்டுப் பொருட்களின் பராமரிப்பு

* குளிர்காலங்களில் முகம் பார்க்கும் கண்ணாடிகளில் சோப்பு நீரை நன்கு தடவி பின்னர் மெல்லிய துணியால் துடைத்தால் பளபளக்கும்.

* திரைச்சீலைகளை மாட்டும் பித்தளை வளையங்களை வினிகரில் கலந்த நீரில் நன்கு கொதிக்க வைத்தால் பளிச்சிடும்.

* சமையல் அறையில் எலுமிச்சை பழச்சாற்றினால் ஏற்படும் வெள்ளைக் கறையை போக்க சிறிது வெண்ணெயை அதில் தடவி சில மணி நேரம் கழித்து துடைத்தால் ‘பளிச்’சென்று இருக்கும்.

* கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியில் நனைத்து மரச்சாமான்களைத் துடைத்தால் வார்னீஷ் செய்ததுபோல் இருக்கும்.

* வெள்ளைத்துணிகளில் எம்ப்ராய்டரி செய்யும்போது அழுக்காகாமல் இருக்க கைகளில் டால்கம் பவுடரை பூசி இருந்தால் துணி அழுக்காகாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மூலிகை குளியல் சோப்பு தயாரிப்பில் பெண்கள்! (மகளிர் பக்கம்)
Next post கோபத்தை கட்டுப்படுத்த எளிய வழிகள்! (மருத்துவம்)