குடற்புண்ணை குணப்படுத்தும் சுக்கான் கீரை!! (மருத்துவம்)
சுக்கான் கீரை
சுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத காரணத்தால் இதை மக்கள் பயன்படுத்துவது குறைவு. இதனை சுக்குக் கீரை, சொக்கான் கீரை என அழைக்கின்றனர். இது பலவித நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
சத்துக்கள்
சுண்ணாம்புச் சத்து – 60 மி.கி.
இரும்புச் சத்து – 9 மி.கி.
மணிச்சத்து – 15 மி.கி.
வைட்டமின் ஏ – 6000 த
வைட்டமின் சி – 13 மி.கி.
தயாமின் – 0.03 மி.கி.
ரைபோஃபிளேவின் – 0.066.
குடற்புண் குணமாக
உணவுமுறை மாறுபாடு, வாயு சீற்றமடைதல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் குடலில் புண்கள் உருவாகின்றன. இவர்கள் சுக்கான் கீரையை புளி சேர்க்
காமல் பாசிப் பருப்புடன் கலந்து வேகவைத்து மதிய உணவில் சேர்த்துக்கொண்டால் குடல்புண் குணமாகும். இதனை சட்னி செய்தும் சாப்பிடலாம்.
மலச்சிக்கல் நீங்க
மலச்சிக்கலின்றி இருந்தால் நோய்கள் எளிதில் அணுகாது. இந்த மலச்சிக்கலைத் தீர்க்க சுக்கான் கீரை சிறந்த மருந்து. சுக்கான் கீரையை ஏதாவது ஒரு வகையில்
உணவில் தினமும்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.
பசி
சிலருக்கு சாப்பிட்ட உணவு எளிதில் சீரணமாகாது. மேலும் பசி என்பதே இவர்களுக்கு இருக்காது. இவர்கள் சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சட்னிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் ஜீரணசக்தி அதிகரிக்கும். நன்கு பசியைத் தூண்டும்.
கல்லீரல் பலப்பட
மது, புகை, போதை வஸ்துக்கள் பயன் படுத்துபவர்களுக்கு ஈரல் வெகு விரைவில் பாதிக்கப்படும். இதனால் இவர்களின் உடலில் பித்தம் அதிகரித்து பல நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. இவர்கள் சுக்கான் கீரையை சூப்செய்து அருந்திவந்தால் ஈரல் நன்கு பலப்படும்.
நெஞ்செரிச்லைத் தடுக்க
சிலருக்கு எது சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல் நெஞ்சில் எரிச்சலை உண்டாக்கும். இவர்கள் சுக்கான் கீரையுடன் பாசிப் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் நீங்கும்.
இதய பலவீனம் சரியாக…
மனித இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரியும். இதில் மாறுபாடு ஏற்படுமானால் உடலில் ஏதோ நோய் ஏற்படுகிறது என்று பொருள். அதிக இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருக்காது. இவர்கள் சுக்கான் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால் இதயம் நன்கு பலப்படும், சீராக இயங்கும். தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வருதல் நலம்.
பல்வலி
சுக்கான் கீரையின் வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பற்கள் பலப்படுவதுடன் பல் ஈறுகள் உறுதியாகும்.
ரத்தத்தைச் சுத்தப்படுத்த…
இரத்தம் தூய்மையாக இருந்தால்தான் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும். சுக்கான் கீரை இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்கான் கீரையை நன்கு நீர்விட்டு அலசி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி பின் சட்னியாக அரைத்து காலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தப்படும். இத்தகைய சிறப்புகள் கொண்ட கீரையை நாமும் சாப்பிட்டு நலமுடன் வாழ்வோம்.
தைராய்டு பிரச்சனை சரியாக…
சுக்கான் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துவரும்போது தைராய்டு பிரச்சனை ஓரளவு கட்டுக்குள் வரும்.
எலும்பு தேய்மானம்
சிலருக்கு எலும்புத் தேய்மானம், கைகால் மூட்டுகளில் வலி இருக்கும். இதற்கு சுக்கான் கீரை நல்ல தீர்வு. ஆர்த்ரைடிஸ் பிரச்சனை உள்ளவர்கள் இந்தக் கீரையில் சூப் மற்றும் பொரியல் செய்து சாப்பிட்டுவர நல்ல தீர்வு கிடைக்கும்.
கால்சியம் போதாமை
சில குழந்தைகளுக்கு கால்சியம் போதாமை இருக்கும். இதற்கு சுக்கான் கீரை நல்ல தீர்வு. இதில் அறுபது மி.கி கால்சியம் சத்து உள்ளது. இது உடலுக்குத் தேவையான கால்சியத்தை சேர்க்கிறது. கால்சியம் போதாமை உடையவர்கள் சுக்கான் கீரையை உடலில் சேர்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட…
வைட்டமின் ஏ இதில் நிறைவாக உள்ளது. இதனால், கண் பார்வை மேம்படும், இதயம் மற்றும் கண்நோய்கள் சரியாகும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். வைட்டமின் சியும் கணிசமாக உள்ளதால் சளி பிடிக்கும் காலங்களில் இந்தக் கீரையை சூப்பாகச் சாப்பிடலாம். உணவாகவும் உட்கொள்ளலாம்.