நன்மை செய்யும் நார்ச்சத்துள்ள உணவுகள்! (மருத்துவம்)

Read Time:7 Minute, 9 Second

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள் நாம் தினந்தோறும் பல வகையான உணவுப் பொருள்களை சாப்பிடுகிறோம். நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுகளிலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் இருக்கிறதா என்பதை தெரிந்துகொண்டு சாப்பிட வேண்டும். நாம் உட்கொள்ளும் உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்திருந்தால்தான் உடல் ஆரோக்கியாக இருக்கும்.

இன்றைய நவீன வாழ்க்கை சூழலில் பலரும் வெளியில் வீட்டில் சமைக்கப்படும் உணவை விட வெளியில் சென்று சாப்பிடுவதையே பெரிதும் விரும்புகின்றனர். வெளியில் சென்று சாப்பிடும் உணவில் போதுமான அளவு சத்துக்கள் இருக்கிறதா, சுத்தமாக செய்யப்பட்டதா, நம் உடலுக்கு ஏற்றதா, பாதுகாப்பானதா என்பதை யாரும் சிந்திப்பதே இல்லை.

இதனால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், மன அழுத்தம், வளர்ச்சி குறைபாடு, ஹார்மோன் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் நம் உடலுக்கு தேவையான அளவு நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும்தான்.

பொதுவாக நாம் சாப்பிடும் உணவு, நம் உடலுக்கு ஊட்டம் தருகிற வைட்டமின்கள், தாதுக்கள். ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பைட்டோகெமிக்கல்கள் மற்றும் என்ஸைம்கள் அடங்கிய ஒரு உணவாக இருக்க வேண்டும். எனவே, நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள உணவை நம் அன்றாட உணவில் இடம்பெற செய்ய வேண்டும்.

இரண்டு வகையான நார்ச்சத்து உள்ளன. ஒன்று கரையக்கூடிய நார்ச்சத்து மற்றொன்று கரையாத நார்ச்சத்து ஆகும்ய கரையும் நார்ச்சத்து நீரில் கரைகிறது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது கரையாத நார்ச்சத்து நீரில் கரைவதில்லை. இது, குடல் இயக்கங்களை ஒழுங்குப்படுத்தவும். மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்துள்ள சில உணவுப் பொருட்களை பார்க்கலாம்.

நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகள்

பேரிக்காய் – இந்தப்பழத்தில் 3.1.கி. அளவு நார்ச்சத்து உள்ளது. மேலும் இவற்றில் கலோரிகள் மற்றும் புரதசத்து உள்ளது. இந்தப் பழத்தை தோலுடன் சாப்பிடுவது நல்லது.நெல்லிக்காய் – நெல்லிக்காய் ஜூஸில் அதிக அளவிலான நார்ச்சத்து நிறைந்துள்ளது. நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். மூளை சுறுசுறுப்பாக செயல்படும் செரிமானத்தை எளிதாக்கும்.

அவகோடா – அவகோடாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது. நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆப்பிள் – ஆப்பிள் விட்டமின்கள், நார்ச்சத்து, புரதங்கள், தாதுக்கள் போன்ற பல சத்துக்கள் நிறைந்த ஒரு பழமாகும். ஆப்பிளின் தோலில்தான் அற்புதமான ஆன்டி ஆக்ஸிடன்ஸ் நிறைந்துள்ளன. ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்கு நல்லது. ஒரு கப் ஆப்பிளில் 2.6கி. நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை அதிகரிப்பதற்கு உதவுகின்றது.

பாசிப்பயறு – பாசிப்பயறில் அதிகமான நார்ச்சத்துக்கள், புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகின்றன. 100 கிராம் பாசிப்பயறில் 16 கிராம் நார்ச்சத்து உள்ளது. தினசரி தேவையான நார்ச்சத்து பாசிப்பயிற்றிலேயே அடங்கியுள்ளது. கருவுற்ற பெண்களுக்கு வேகவைத்த பாசிப்பயறை தினமும் கொடுத்து வந்தால் உடல் வலுபெறும்.எளிதில்
ஜீரணமாகும்.

வாழைப்பழம் – 100 கிராம் வாழைப்பழத்தில் 2.6 கிராம் அளவு நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்தவும் மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவுகிறது.
கொய்யாப்பழம் – கொய்யாப்பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள பழமாகும். கொய்யாப் பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. தினமும் கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்து கிடைத்துவிடும்.

பாதாம் – நட்ஸ் வகைகளில் பாதாமில்தான் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. தினமும் ஜந்து பாதாமை இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. அஜீரணக் கோளாறைப் போக்கி உணவை நன்கு செரிமானம் அடையச் செய்கிறது.அத்திப்பழம் – அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை மேம்படுத்துவதோடு, மலச்சிக்கல் பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.

கேரட், பீட்ரூட் – கேரட் மற்றும் பீட்ரூட்டில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே, வாரத்தில் 2 முறை இவற்றை உணவாகவோ ஜூஸாகவோ சாப்பிடுவது மிகவும் நல்லது. தொடர்ந்து சாப்பிடுவதால் ரத்த உற்பத்தி அதிகரிக்கவும் மற்றும் செரிமானக் கோளாறுகளை தடுக்கவும் உதவுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிரபலமாகி வரும் வாக்-இன் திருமணங்கள்! (மகளிர் பக்கம்)
Next post மனவெளிப் பயணம்!!! (மருத்துவம்)