இளம் மனைவியருக்கு ஆலோசனை!! (மகளிர் பக்கம்)
திருமணமாகி கணவர் வீட்டுக்குச் செல்லும் பெண்களுக்கு சில ஆலோசனைகள். இதைக் கடைப்பிடித்தால் வாழ்க்கை இன்பமாகும்.
*இந்த பார்டரை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்…
மகனுக்கு திருமணமானதும், மாமியார்… மருமகள் வந்துட்டா நான் ஓய்வெடுக்கப் போறேன்னு நினைச்சா ஆபத்து. அதே சமயம் அம்மாவிற்கு மட்டுமே சப்போர்ட் செய்து பேசக்கூடாது. இரு பக்க நியாயத்தை பார்க்க வேண்டும். அதனால் மருமகள் கணவரிடம் உன் எல்லையை தாண்டக்கூடாது, நானும் தாண்ட மாட்டேனு நாசுக்காக கூறிவிடலாம்.
*ஆணியை பிடுங்க வேணாம்…
மாமியார் வீட்டில் நல்ல பெயர் எடுக்க மருமகள் துடிப்பது சகஜம். ஆனால் ஒரு எச்சரிக்கை. நன்கு தெரிந்ததை செய்யுங்கள். தெரியாததை தெரியும் போல் காட்டிக் கொண்டு வேலையில் இறங்க வேண்டாம். அது பெயரை கெடுத்துவிடும்.
*உனக்கு வந்தா ரத்தம்… எனக்கு வந்தா தக்காளி சட்னியா?
கணவர்கள், தங்களுடைய காரியம் என்றால், உடனே அதனை முதல் காரியமாக செய்து முடித்துவிடுவர். அதே சமயம் மனைவி சார்ந்த வேலையை தள்ளிப் போடுவர். இந்த சமயத்தில் அன்பை வார்த்தையில் தோய்த்து குரல் கொடுக்க தயங்காதீர்கள்.
*இப்படி உசுப்பேத்தி… உசுப்பேத்தியே உடம்பை ரணகளம் ஆக்கிட்டேங்களடா!
வாழ்க்கையில் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்குவது என்பது இயலாத காரியம். மாமியார் வீட்டில் உங்களை புகழுவதற்காக எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்தா நல்ல பெயர் கிடைக்கும். அதே சமயம் அனைத்தையும் உங்க தலையில் கட்டி விடுவார்கள்.
*பீ கேர்ஃபுல்… நான் என்னைச் சொன்னேன்!
எதிலும் கவனம் தேவை. குறிப்பாக மனைவி பேச்சிலும் செயலிலும் கவனம் வேண்டும். தவறினால் கணவரிடமிருந்தும், குடும்பத்தாரிடமும் கெட்ட பெயர் வரும்.
*ரிஸ்க் எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிடறா மாதிரி!
புத்திசாலித்தனம் என்பதே பயப்படாமல், எதிர்கொண்டு, வரும் சங்கடங்களை சமாளித்து கணவரையும், தன்னையும் காத்துக் கொள்வதுதான். அந்த
மனப் பக்குவத்தையும் உருவாக்கிக் கொள்ளணும்.
*ப்ளான் பண்ணித்தான் பண்ணணும்!
திட்டமிட்டு செய்பவர்கள் வெற்றி மற்றும் பாராட்டை பெறுவார்கள்.
*சண்டைல கிழியாத சட்டை எங்கே இருக்கு?
கோபப்பட்டால், நஷ்டம் நமக்குத்தான். கணவரிடம் நயமாக பேசினால், மசிந்திடுவார்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...