முகத்திற்கேற்ற சிகையலங்காரம்!! (மகளிர் பக்கம்)
எல்லோருக்கும் ஒரே மாதிரியான முக அமைப்பு இருக்காது. சிலரின் முகம் வட்ட வடிவமாக இருக்கும். ஒரு சிலருக்கு தாடை நீண்டு இருக்கும். சதுர வடிவத்திலும் முக அமைப்பு கொண்டவர்கள் உள்ளனர். எப்படி ஒவ்வொருவரின் முக அமைப்பில் மாற்றம் உள்ளதோ, அதே போல் அவர்களின் சிகை அலங்காரத்தையும் மாற்றி அமைத்தால்தான் அவர்களின் முகத்திற்கு எடுப்பாக இருக்கும். வெவ்வேறு முக அமைப்பு கொண்டவர்கள் எவ்வாறு சிகை அலங்காரம் செய்து கொள்ளலாம் என்று தெரிந்து கொள்வோம்…
* நீள முகம் உள்ளவர்கள் முகத்தின் இரு பக்கங்களிலும் முடி அதிகமாகத் தெரியும்படி முடியைத் தளர்வாக விட்டுக் கொண்டால் அழகு கூடும்.
* முட்ைட வடிவ முகம் உள்ளவர்கள், தலை பாகத்தில் பரவலாக முடி தெரியும்படியும், நீளமாகவும் தலைமுடியை அலங்கரித்தால் அழகாக இருக்கும்.
* நீண்ட கழுத்து உள்ளவர்கள் தலைமுடியை அதிகம் குட்டையாக்கிக் கொள்ள வேண்டாம். கழுத்துக்கும் சற்று கீழே முடியை கத்தரித்தால் போதும். அதற்கும் குறைத்தால், தலை மட்டும் தனியே தெரியும். நன்றாக இருக்காது.
* கழுத்தே தெரியாமல் இருப்பவர்கள், ‘பாய்கட்’ செய்து கொள்வது நல்லது.
* உருண்டை முகம் உள்ளவர்கள் எப்படி அலங்காரம் செய்து கொண்டாலும் நன்றாக இருக்கும். இறுக்கமாகத் தலையைப் பின்னிக் கொள்ளலாம். தளர்வாக காதில் முடி விழுவது போல தலை முடியைக் கட்டிக் கொள்ளலாம். பாய்கட் செய்து கொண்டாலும் நன்றாகவே இருக்கும்.
* நெற்றி குறுகலாக தாடை அகலமாக உள்ளவர்கள் தலையில் முன் முடிைய நேர்த்தியாகக் கட் செய்து கொண்டால் அழகு கூடும். தாடைக்கு சமமாக முடியை இரண்டு புறமும் கட் செய்து பின்புற முடியை நீளமாக வைத்துக் கொள்ளலாம்.
* காதுகள் பெரிதாகத் தனியாகத் தெரியும் பட்சத்தில் காதை மறைக்கும் அளவு முடியை கட் செய்து சுருட்டி விடுவது நல்லது.
* முகவாய் சிறிதாக உள்ளவர்கள், கழுத்து வரை முடியை கட் செய்து உட்புறமாக சுருட்டி விட்டுக் கொண்டால், அழகே அழகுதான்.
* குண்டாக இருப்பவர்கள் தலைமுடியை இறுக்கமாகப் பின்னுவது தவறு. தளர்வாகப் பின்னிக் கொள்வதே இவர்களுக்கு நல்லது. முடியை குட்டையாக கட் செய்வதோ, நீளமாக வளர்த்துக்
கொள்வதோ உதவாது.
* நல்ல உயரமும், கொடி போன்ற உடல் வாகும் உள்ளவர்கள் தோள் வரையில் முடியை ‘கட்’ செய்து கொண்டால் இவர்களின் அழகில் எல்லோருமே மயங்கி விடுவார்கள்.
* ஓவல் வடிவ முகம் உள்ளவர்கள் வெறும் நுணிகளை மட்டும் டிரிம் செய்து விட்டு அப்படியே கூந்தலை விரித்து விட்டுக் கொண்டால் அவர்கள் முகத்திற்கு எடுப்பாக இருக்கும்.
* அகன்ற வட்ட வடிவமான முகம் உள்ளவர் என்றால் அவர்கள் நெற்றியில் விழுகிற மாதிரி முன்னந்தலை முடியை ெவட்டிக் கொண்டால் அழகாகக் காட்சி தருவார்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...