தண்டுக்கீரை பொரியல்!! (மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 40 Second

தேவையான பொருட்கள்

தண்டுக்கீரை – 1 கட்டு
தேங்காய்த்துருவல் – முக்கால் கப்
எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை

கீரையை நன்றாகக் கழுவி தண்ணீரை நன்கு வடித்துவிட்டு பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை பொடியாகவும், பச்சை மிளகாயை நீளவாக்கிலும் வெட்டி வைத்துக்கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும், பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள கீரையுடன் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கீரை வேகும் வரை நன்றாகக் கிளறவும். கீரை வெந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி விடவும். இப்போது சுவையான தண்டுக்கீரை தயார். இதை சாம்பார், ரசம் என எந்த குழம்பு வகையுடன் சேர்த்து பறிமாறலாம். சுவை அள்ளும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வாழை இலை கிழி பரோட்டா!! (மகளிர் பக்கம்)
Next post வயாகரா முதல் வைப்ரேட்டர் வரை…!!(அவ்வப்போது கிளாமர்)