நம்பிக்கையோடு நடையிடுங்கள்!! (மருத்துவம்)

Read Time:6 Minute, 41 Second

டயாபடீக் பாதப் பராமரிப்பு!

பொதுவாக, ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் பூமியை நான்கு முறை சுற்றி வரும் அளவிற்கு நடக்கிறார்கள். அந்தளவிற்கு நம்மை தாங்கி நடக்கும் பாதத்தை நாம் அவ்வப்போது கவனிப்பதும், பராமரிப்பதும் அவசியமாகும். அதிலும், சர்க்கரை நோயாளிகள் தங்கள் பாதங்களை பராமரிப்பது மிக மிக அவசியமாகும். ஏனென்றால், சர்க்கரை கட்டுக்குள் இல்லை என்றால், முதலில் பாதிக்கப்படுவது பாதங்கள்தான். எனவே, சர்க்கரை நோயாளிகள் தங்களது பாதங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் டாக்டர் ஆர்.கே. டயாபடிக் ஃபுட்கேர் மற்றும் போடீயேட்ரி இன்ஸ்டிட்யூட்டின் தலைமை மருத்துவர் ராஜேஷ் கேசவன்.

சர்க்கரை நோயாளிகளுக்கு பாதத்தில் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன..

சர்க்கரை கட்டுக்குள் இல்லை என்றால், முதலில் பாதிக்கப்படுவது பாதங்கள்தான். அதாவது, பாதம் மற்றும் கால்விரல்களில் உணர்வின்மை.பெருவிரல் அல்லது பாதத்தில் வீக்கம் மற்றும் வலி ஏற்படுதல்.குளிர்ச்சியான தன்மை கொண்ட பாதம் மற்றும் கால் விரல்கள். நாள்ப்பட்ட ஆறாத புண்கள் மற்றும் பாதங்களில் நிறமாற்றம் அல்லது சிதைந்த நகங்கள்.கால் நரம்புகள் பாதிக்கப்படுவது. இதனால், பாதம் மற்றும் விரல்களின் வடிவம் மாறுவது. பாதங்கள் உலர்வடைவது. விரைப்பு தன்மை குறைவது. பாதங்களில் வெடிப்பு வருவது. சிலருக்கு பாதங்களில் அழுத்தங்கள் அதிகமாவதால், அணிகால் வருவது போன்ற பிரச்னை ஏற்படுகிறது.மாலை நேரம் தொடங்கியதும், பாதத்தில் எரிச்சல் ஏற்படுவது வலி போன்ற உணர்வு ஏற்படுவது.

அதுபோன்று சர்க்கரை கட்டுக்குள் இல்லாத சிலருக்கு டயாபடிக் புல்லா ( diabetic bulla) எனும் நீர் கொப்பளங்கள் பாதங்களில் ஏற்படுவது. பின்னர் அதுவே உடைந்து புண்ணாகவோ, காயங்களாகவோ மாறுவது போன்றவை ஏற்படலாம். பாதப்பிரச்னைகளுக்கு உங்களது சிகிச்சை முறை என்ன..முதலில் சில அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதில், அவரது சர்க்கரை எந்தளவில் இருக்கிறது, கால் நரம்புகளில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா, ரத்த ஓட்டம் எவ்வாறு இருக்கிறது என்பதெல்லாம் பரிசோதிக்கப்படும். பின்னர், அவரவருக்கு தகுந்த சிகிச்சையை தொடங்குவோம்.

மேலும், பயோ மெகானிக்கல் அசஸ்மெண்ட், ஹைபர் பேரிகார்டன்ஸ் தெரபி, லீவர் தெரபி, கொல்டு பிளாஸ்மா தெரபி, இல்லுமெனேட் போட்டோ டிவைஸ் என்ற நவீன சிகிச்சை முறை, கேட் அனலைஸஸ் என்ற அட்வான்ஸ்ட் சிகிச்சை முறை போன்ற பலவிதமான சிகிச்சை முறைகள் மேற்கொள்கிறோம். மேலும், மோனோ க்ரோமெட்டிக் இன்ப்ரா ரெட் எமிஷன் தெரபி ( எம்.ஐ.ஆர். இ) என்ற அதிநவீன தெரபி மற்றும் ரத்த நாளங்களை ஆராய்ந்து அதன்மூலம் சரி செய்வதற்கான ஆன்ஜியோ பிளாஸ்டிக் சிகிச்சை முறை போன்றவையும் இருக்கிறது.

இதுதவிர, எக்ஸ்டமிட்டரி எம்.ஆர்.ஐ என்ற நவீன ஸ்கேன் முறைகள் உபயோகப்படுத்துகிறோம். பொதுவாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் எனும்போது, உடல் முழுவதும் அந்த ஸ்கேன் செய்யும் இயந்திரத்திற்குள் சென்று வரும். அதில் பலருக்கும் பயம் இருக்கும். ஆனால், இந்த எக்ஸ்டமிட்டரி எம். ஆர்.ஐ ஸ்கேனில், ஒருவர் காபி அருந்தி கொண்டே, காலை மட்டுமே ஸ்கேன் செய்து கொள்ளலாம். இந்தியாவிலயே முதன்முறையாக நாங்கள் இதை உபயோகப்படுத்துகிறோம்.

எனவே, சர்க்கரை நோயாளிகளுக்கு பாதங்கள் சார்ந்த பிரச்னை எதுவாக இருந்தாலும், அதற்கு, அதிநவீன அட்வான்ஸ்ட் டெக்னாலஜி, தெரபிகள் போன்றவற்றை பயன்படுத்தி, அதன் ஆணி வேரை கண்டு அறிந்து, அது மீண்டும் வராதபடி முழுமையான சிகிச்சை அளித்து வருகிறோம்.

சர்க்கரை நோயாளிகள் பாதங்களை தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் என்ன.?

பாதங்களை பிரச்னை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியமானது.
வீட்டுக்குள் இருந்தாலும், வெளியே சென்றாலும், சாக்ஸ் அணிந்து, செருப்பு போட்டுக் கொண்டுதான் நடக்க வேண்டும். வெறும் காலில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.

அதிக சூடு உள்ள வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். அதுபோன்று குளித்துவிட்டு வந்ததும், மாய்சுரைசிங் கிரீம் பாதங்களின் மேல் தடவலாம். இதனை காலை, மாலை இரண்டு வேளை தடவலாம். இடைப்பட்ட நேரத்தில் மாய்சுரைசிங் கிரீம் தடவக் கூடாது. அதுபோல, சிலர் குளித்துவிட்டு வந்ததும் தேங்காய் எண்ணெய், வெஜிடெபிள் எண்ணெய் போன்றவற்றை பாதங்களில் தடவுவார்கள். இதனை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், எலி, எறும்பு போன்றவற்றிடமிருந்து பாதங்களை பாதுகாக்க இது உதவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆண் என்ன? பெண் என்ன? (அவ்வப்போது கிளாமர்)
Next post முடக்கு வாத நோய்களை விரட்டும் வாதநாராயணன் கீரை!! (மருத்துவம்)