அகத்திக் கீரையின் அற்புதங்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 22 Second

* நீரின்றி அமையாது உலகு என்றால் கீரையின்றி வளராது உடல் என்றும் சொல்லலாம். காரணம், கீரை என்ற அந்த மூலிகை இலைகளால் மனித வாழ்விற்குத் தேவையான வளமான புரத சத்துக்கள் உள்ளதுதான்.

*இந்தியாவில் பல இடங்களில் பயிரிடப்படும் கீரைச்கெடிதான் அகத்திக்கீரை. இச்செடி 15 அடி முதல் 25 அடி உயரம் வரை வளரக்கூடிய தாவரமாகும். இச்செடியின் மேல் வெற்றிலைக்கொடியை படர விடவே வளர்க்கப்பட்டது. பின்னாளில் இந்த கீரையே கால்நடைகளின் தீவனமாகவும் உபயோகமாயின.

*அகத்திக்கீரையில் இருவகை உண்டு. சாதா அகத்தியில் வெண்மை நிற பூ வரும். செவ்வகத்தியில் சிவப்பு பூ பூக்கும். இதில் சீமை அகத்தி, சாழை அகத்தி, சிறு அகத்தி, பேய் அகத்தி என சில வகைகள் உண்டு.

*அகத்திக்கீரையை முனி, அச்சம் என்ற பெயர்களிலும் அழைப்பர். அகத்தியின் இலை, பூ, வேர், தண்டு ஆகியவை மருந்தாகப் பயன்படுகிறது.

*இக்கீரையை உண்பதால் உடலிலுள்ள விஷத்தை முறிக்கும். குளிர்ச்சியைத் தரும். வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும். உடலில் சுண்ணாம்புச்சத்தை உருவாக்கும். பித்தத்தை குறைக்கும். கட்டி போன்ற தழும்புகளைக் கரைத்திடும்.

*இக்கீரையை உண்பதால் வாயுத்தொல்லை குறையும்.

*நோய் உள்ளவர்கள் இக்கீரையை சாப்பிடலாகாது. அவர்கள் மூன்று மாதத்திற்கொரு முறை சமைத்து சாப்பிடலாம். அடிக்கடி சாப்பிட்டால் ரத்தம் குறையும். சொறி சிரங்கு, வீக்கம், எரிச்சல், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட காரணமாகும்.

*இக்கீரையைச் சாப்பிட பல நன்மைகளும் உண்டு. அகத்திப்பூவை சமைத்து உண்டால் போதைக்கு அடிமையானவர்கள் அதை மறப்பர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post படிச்சாதான் மதிப்பாங்க! (மகளிர் பக்கம்)
Next post செயற்கை உணவு நிறங்கள்!! (மருத்துவம்)