கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 22 Second

மொறு மொறு வடை

*உளுந்து வடைக்கு உளுந்து அதிக நேரம் ஊற வைக்கக்கூடாது. அரை மணி முதல் ஒரு மணி நேரம் போதும்.

*அரைத்த மாவை உடனே தட்டாமல், பதினைந்து நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தண்ணீரைத் தொட்டுக் கொண்டு வடைகளாக தட்டுவது சுலபமாக இருக்கும்.

*மாவு நெகிழ்ந்துவிட்டால் சிறிது அவலை கலந்து தட்டினால் வடை மிருதுவாகவும் இருக்கும்.

*வடை மாவில் ரவையை கலந்து சிறிது நேரம் ஊறிய பிறகு சுட்டால் வடை கரகரப்பாக இருக்கும்.

*பச்சை மிளகாய்க்குப் பதில் அரைத்த மாவில் மிளகை ஒன்றிரண்டாக உடைத்தும் போடலாம்.

*வடை வெளியே கரகரப்பாக இருந்தாலும் உள்ளே மிருதுவாக இருக்க வேண்டும் என்றால் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.

– சுந்தரி காந்தி, சென்னை.

*தக்காளி, வெங்காயம் போன்ற சட்னி செய்யும்போது சிறிது கறுப்பு எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டால் சட்னியின் மணமும் ருசியும் கூடுதலாக இருக்கும்.

*துவையல் அரைக்கும் போது, மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக, மிளகு சேர்த்து அரைத்தால் துவையல் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

*கொத்தமல்லி, புதினா துவையல் அரைக்கும் போது தண்ணீருக்குப் பதிலாக சிறிது தயிர் சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

– எம்.ஏ.நிவேதா, திருச்சி.

*சப்பாத்திக்கு மாவு பிசையும்போது ஒரு டேபிள்ஸ்பூன் பால் பவுடர் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி மென்மையாக, வெண்மையாக இருக்கும்.
*காய்கறிகளை வில்லைகளாக நறுக்கி, உப்பு கலந்த தண்ணீரில் போட்டு எடுத்து, ஆவியில் இரண்டு நிமிடம் வேக விட்டு பஜ்ஜி மாவில் தோய்த்துப் பொரித்து எடுத்தால் ‘பஜ்ஜி’ மிகுந்த சுவையுடன் இருக்கும்.
*மாங்காயை தோல் சீவி துருவிக்கொள்ளவும். வாணலியில் கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மாங்காய்த் துருவலையும் சேர்த்து வதக்கவும். பின் வடித்த சாதம், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி ‘மாங்காய் சாதம்’ பரிமாற ஏற்றது.

– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

*தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் முழு வாழைக்காயை போட்டு ஐந்து நிமிடங்கள் போட்டு எடுத்து, பிறகு சிப்ஸ் செய்ய சீவினால் தூள் ஆகாமல் சீவலாம். சீக்கிரம் மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கலாம்.
*உருளைக்கிழங்கு பொரிப்பதற்கு முன்பு, சிறிதளவு பாசிப்பருப்பு மாவை தூவி விட்டால் மொறு மொறுப்பாகவும்,
சாப்பிட சுவையாகவும் இருக்கும்.

– எஸ். ஆஷாதேவி, சென்னை.

*மெதுவடை செய்யும்போது, உளுந்து மாவுடன் சிறிதளவு சேமியாவை தூள் செய்து கலந்து வடை செய்தால் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.
*வேக வைத்த உருளைக்கிழங்குடன் அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து ஓமப்பொடி பிழிந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
*கோதுமை மாவில் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவையாக இருக்கும்.

– எஸ்.ஜெயந்திபாய், மதுரை.

*அடை செய்ய தயாரித்த மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் கார்ன்பிளேக்ஸ் தூளை போட்டு கலக்கி, அடை செய்தால் ருசியாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
*தயிர் கெட்டியாக இருக்க, நன்றாக காய்ச்சி, இளம் சூடான பாலில், சிறிதளவு காய்ச்சாத பாலையும், சிறிதளவு தயிர் சேர்த்து வைக்கவும்.
*சாம்பார் வெங்காயத்தை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்தால் ஒரு மாதம் ஆனாலும் கெடாமல் இருக்கும். முளையும் விடாது.

– அ.சித்ரா, காஞ்சிபுரம்.

*கொதிக்க வைத்த பாலில் 4 நெல் மணிகளைக் கழுவி போட்டு வைத்தால் இரண்டு நாட்களானாலும் பால் கெடாது.
*கையில் பூண்டு வாடை வீசினால் சிறிது தக்காளியை தேய்த்து கழுவினால் வாடை போய்விடும்.
*கலந்த சாதங்களை செய்யும்போது நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி சேர்த்து கிளறினால் வாசமுடன் சுவையாக இருக்கும்.

– காந்தி பாரதி, சென்னை.

*காய்கறி துருவியை கழுவும் முன்பு பழைய பல் தேய்க்க உதவும் பிரஷினால் தேய்த்தால் அதில் உள்ள துகள்கள் எளிதில் நீங்கிவிடும்.
*பாத்திரங்களை அலம்பும் நீரில் அவ்வப்போது சிறு வினிகரை கலந்து கழுவினால் பாத்திரங்கள் மின்னும். கைகளும் மென்மையாக இருக்கும்.
*வழக்கமாக தயார் செய்யும் சப்பாத்தி மாவுடன் துருவி வேக வைத்து மசித்த கேரட் மற்றும் சீரகப்பொடி ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி செய்தால் சுவை நன்றாக இருக்கும்.
*பூண்டை லேசான சுடுநீரில் சிறிது நேரம் போட்டுவிட்டு பின்பு உரித்தால் தோல் எளிதாக நீங்கிவிடும்.

– ஹெச்.ராஜேஸ்வரி, பூந்தமல்லி.

கத்தரிக்காய் தவா ரோஸ்ட்

தேவையானவை:

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது), தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது), இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, கத்தரிக்காய் – 4 (நறுக்கியது), மசாலா – 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் அதில் கத்தரிக்காய், உப்பு, மஞ்கள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்பு மூடி வைத்து கத்தரிக்காயை வேக வைக்க வேண்டும். கத்தரிக்காய் நன்கு வெந்ததும் அதில் பாவ் பாஜி மசாலாவை ேசர்த்து சில நிமிடங்கள் கிளறி இறக்கினால், சுவையான கத்தரிக்காய் தவா ரோஸ்ட் தயார்.

குறிப்பு: இந்த கத்தரிக்காய் தவா ரோஸ்ட் சாம்பார் சாதம், தயிர் சாதம், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெண்களை புத்திசாலிகளாக்கும் ‘உச்சகட்டம்’…! (அவ்வப்போது கிளாமர்)
Next post பெண்கள் படித்து உயர்ந்தால் இல்லம் உயரும்! (மகளிர் பக்கம்)