வெந்தயக்கீரை அடை!! (மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 21 Second

தேவையான பொருட்கள்

வெந்தயக்கீரை – 2 கட்டு
கடலைப் பருப்பு – 1 கப்
பச்சரிசி – கால் கப்
காய்ந்த மிளகாய் – 5
இஞ்சி – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை

கடலைப் பருப்பையும், பச்சரிசியையும் 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு வைத்து லேசாக, கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். வெந்தயக் கீரையை வேர்கள் நீக்கி, கழுவிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கீரையை அரைத்து வைத்திருக்கும் மாவில் கலக்கவும். மாவில் பொடியாக நறுக்கிய இஞ்சித் துண்டுகளைச் சேர்க்கவும். பெருங்காயத்தையும் மாவில் சேர்க்கவும். தோசைக்கல்லில் இந்த வெந்தயக்கீரை மாவை அடையாக தட்டிப் போட்டு சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு சிவந்ததும் எடுக்கவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அலர்ஜியை அறிவோம். . ! டீடெய்ல் ரிப்போர்ட்!! (மருத்துவம்)
Next post வான்கோழி பிரியாணி!!! (மகளிர் பக்கம்)