கொழுப்பை குறைக்கும் திப்பிலி!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 5 Second

சுக்கு, மிளகோடு திப்பிலியும் சேர்த்து தயாரிக்கிறதுதான் திரிகடுகம். இது செரிமானக் கோளாறுல தொடங்கி நுரையீரல்ல சளி, வயிறு உப்புசம், தலைவலின்னு பல பிரச்னைகளை சரி செய்கிறது. சொறி, சிரங்கு, படர்தாமரை இவற்றை குணப்படுத்துகிறது.

ஆஸ்துமா, மூச்சுக்குழாய்ல ஏற்படும் அழற்சி, தொண்டைல வரக்கூடிய புண் எல்லாத்தையும் திப்பிலி சரிபண்ணும்.திப்பிலியில் உள்ள பைப்ரின், உடலில் உள்ள கொழுப்பை குறைக்கக்கூடியது. உடல் எடையைக் குறைக்கவும் இது துணை நிற்கிறது.

திப்பிலிப் பழத்தை டூத் பேஸ்ட்டா மாற்றி பல்வலி, வாய் நாற்றத்திற்கு பயன்படுத்தலாம். பாக்டீரியாக்களை எதிர்க்கிறதோடு வலிகளை விரட்டுறதுக்கும் இந்த திப்பிலி பழ பேஸ்ட் நல்ல மருந்தா செயல்படுகிறது.திப்பிலி பழத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தூக்கமின்மையை அகற்றும். பொதுவான சளித்தொல்லை, இருமல் இருந்தால் திப்பிலிப் பொடியை சூடான பாலில் கலந்து குடித்தால் குணம் கிடைக்கும்.

– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

கூந்தல் தைலங்கள்

தலைச்சூடு, நுண்கிருமிகள் போன்ற காரணங்களாலேயே முடி உதிர்வது, நரை, பொடுகு போன்றவை உண்டாகின்றன. இவற்றைத் தடுப்பதற்கு சில தைலங்களைச் செய்து உபயோகித்து வரலாம். அவை செய்வதற்கேற்ற எளிய வழிமுறைகள் இதோ.சந்தனாதி தைலம்: நல்லெண்ணெய், பசும்பால், தண்ணீர் அனைத்தும் தலா அரை லிட்டர் சேர்த்து காய்ச்சவும். நன்னாரி, அதிமதுரம், சந்தனத்தூள், ஏலரிசி, நெல்லிவிதை, தாமரைப்பூ, வெட்டிவேர், கோரைக்கிழங்கு, தேவதாரம் ஆகியவற்றில் தலா 10 கிராம் எடுத்து, இடித்துப் பொடி செய்து எண்ணெயில் போட்டு மீண்டும் ஒரு முறை நன்றாகக் காய்ச்சி, ஆறவிட்டு வடிகட்டி பாட்டில்களில் அடைக்கவும். கேசப் பாதுகாப்புக்கு சிறந்த தைலம் இது.

வில்வாதி தைலம்: 100 கிராம் வில்வ வேர்ப்பட்டையை இடித்து தூளாக்கிக் கொண்டு இரண்டு தம்ளர் நீரில் போட்டுக் கொதிக்க விடவும். நீர் சுண்டிய பிறகு எடுத்து அரை லிட்டர் நல்லெண்ணெயில் போடவும். சந்தனத் தூள் 50 கிராம், கடுக்காய் 10 கிராம், கஸ்தூரி மஞ்சள் 10 கிராம் எடுத்து இடித்துப் பொடி செய்து சேர்த்து எண்ணெயை நன்றாகக் காய்ச்சி இறக்கி ஆறியதும் வடிகட்டவும்.

நெல்லித் தைலம்: நெல்லிக்காயை இடித்துப் பிழிந்த சாறு கால் லிட்டருடன் அரை லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்துக் கலந்து மூன்று நாள் வெயிலில் காய வைக்கவும். பிறகு அதை நிதானமாக எரியும் தீயில் காய்ச்சி இறக்கி ஆறியபின் பாட்டில்களில் நிரப்பவும். ஒரு வாரத்திற்குப் பிறகு உபயோகிக்கலாம். எண்ணெய் குளியலுக்கு இத்தைலத்தைப் பயன்படுத்தினால் கண் எரிச்சல், பித்தம் போன்றவை நீங்கும். தலை முடி பளபளப்பாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள்!! (மருத்துவம்)
Next post படுக்கையில் நீடித்த இன்பம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?(அவ்வப்போது கிளாமர்)