கணவன் – மனைவியை தீர்மானிப்பது முதலிரவா? (அவ்வப்போது கிளாமர்)
முதலிரவு என்பது ஒருவருடைய வாழ்க்கையில் இன்றியமையாத பரிசாகும். காதல் திருமணம் கொண்டவர்கள் கூட, தான் கடந்து வந்த வாழ்க்கையில் என்னெவெல்லாம் கண்டோம் என்பதை பற்றி தான் இரவில் பாதி நேரம் பேச செய்வார்கள். அப்படி இருக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் எனில், அதன் சுவை என்பது முதலிரவை பொறுத்து தான் அமையக்கூடும். பொதுவாக பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்தில்… திருமணத்திற்க்கு முன்பு நேரில் அடிக்கடி பேசுவதென்பது கொஞ்சம் இயலாத காரியம் என்பதால், போனில் பேசுவதைக்காட்டிலும் நேரில் ஒருவரை சந்திக்கும் போது கொஞ்சம் தயக்கமாகவே அமையக்கூடும். அப்படி இருக்க, முதலிரவு எப்படி இருக்கும் என்பதை நீங்களே யோசித்து பாருங்களேன்…
பாலியல் சந்தேகங்களும் அதற்கான பதில்களும் – பாகம் 1
கணவன் – மனைவியை மகிழ்விக்க முதலிரவில் காணும் 10 தருணங்களை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
கற்பனையை தவிர்த்திடுங்கள்:
முதலிரவு பற்றிய கனவு என்பது நாம் பருவம் எய்தும் போதே வந்துவிடும் ஒன்று. அதனால், முதலிரவு பற்றிய பல ஆசைகள் பலர் மனதில், பல வித பரிணாமங்களில் இருப்பது வழக்கம். எவ்வளவு ஆசைகள் இருந்தாலும், அதை முதலிரவு அன்று மூட்டை கட்டிவைக்க வேண்டியது அவசியமாகும். இல்லையேல், திருப்தி அடைதல் என்பது இல்லாமல் போக, இதனால் மனக்கசப்பும் உங்கள் இருவர் மனதில் ஏற்படக்கூடும்.
தொடர்புகொள்ளும் விதம்:
பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, காதல் திருமணமாக இருந்தாலும் சரி… நீங்கள் இருவரும் மனம் விட்டு பேச வேண்டியது மிக அவசியம். கணவன் சொல்லை கேட்டு அதற்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக்கொண்டு பேச வேண்டியது மிக மிக முக்கியம். இல்லையேல், ஈரம் படம் நிலை தான். பார்த்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.
அடுத்த நாள் ஓய்வு:
முதலிரவுக்கு அடுத்த நாள், அங்கே செல்வது… இங்கே செல்வது போன்ற அலைக்கழிக்கும் விஷயத்தை தவிர்த்திடுங்கள். இது உங்களை உடல் அளவில் அடுத்த நாளுக்கு தயார் செய்யவும் உதவக்கூடும். தேனிலவு செல்பவர்களும் இதை பின்பற்றி செயல்படலாம்.
ஆச்சரியமூட்டும் பரிசு:
கணவன் – மனைவியை தீர்மானிப்பது முதலிரவா?
உங்கள் கணவன், மனைவிக்கு காதல் உணர்வை தூண்டும் அழகிய பரிசை முதலிரவில் தந்து இனிதே அவர்கள் தோளில் சாயலாம். இதனால், மிகப்பெரிய ஊடல் என்பது உள்ளம் புரிதலுடன் அமையக்கூடும்.
மனம் விட்டு பேசுங்கள்:
முதலிரவு என்பது குழந்தை பிறப்புக்கான அத்தியாய தொடக்கம் மட்டுமல்ல. உங்கள் இருவர் மனதில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை புரிந்துக்கொண்டு, அதன் மூலம் குழந்தை பிறப்புக்கு வழிவகுக்க, இதனால் உங்கள் குழந்தையும் உங்களை போல் இருந்திடக்கூடும்.
ஆபாச காட்சிகளை படம்பிடித்த விமான சேவை ஊழியர்களால் சர்ச்சை! (video)
மெதுவாக தொடங்குங்கள்:
முதலிரவில் முதன்மையான உணர்வை தருவது மென்மையான முறையில் கணவனும், மனைவியும் ஊடல் கொள்வதே. உங்கள் உடம்பில்… தட்டில் வைக்கப்பட்ட பழங்கள் கொண்டு அழகாக விளையாடலாம். இதனால் நீங்கள் இருவருமே உச்ச நிலையை அடையக்கூடும். எடுத்தோம்…கவிழ்த்தோம் எனும் அவசரம் வேண்டாம். சிங்கம் சூர்யா போல் ஆக்ரோஷமாக பிள்ளை பிறந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
கன்னியின் கவலை:
“கன்னி” எனும் சொல் ஆண், பெண் இருவருடைய ஆண்மையை குறிப்பதாகும். அப்படி இருக்க, முதலிரவில்., முதல் முறையாக உடலுறவு கொள்ளும் பயம் என்பது இவர்களுக்கு இருத்தல்கூடும். நீங்கள் பெண் என்றால், முதலிரவில் சிந்தும் இரத்தம், அல்லது அடையும் வலி கண்டு பயம் வேண்டாம். உங்கள் கணவர் உள்நுழையும் முன்னே, நீங்கள் உங்களை உடல் அளவில் தயார்ப்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம். முதலிரவுக்கு முன்னரே… உங்கள் திருமணமான தோழி அல்லது பெண் மன நிபுணரிடம் பரிந்துரை பெற்றுக்கொள்வது நல்லது.
விருப்பத்தை பதிவு செய்யுங்கள்:
நீங்கள் இருவரும் உங்களுக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? என்பதை முதலிரவில் தெரிந்துக்கொள்ளலாம். இதனால், ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ளும் நிலையானது உங்களுக்கு கிடைத்திடக்கூடும். அதனால், என்ன திரைப்படம் பிடிக்கும்? என்ன பாடல் பிடிக்கும்? என்ன உணவு பிடிக்கும்? போன்ற விஷயத்தை பகிர்ந்துகொள்வது நல்லது.
கடினமான சூழ்நிலையை புரிந்து நடத்தல்:
உடலுறவு கொள்ளும்போது, நீங்கள் இருவரும் அடையக்கூடிய கடின நிலைகளை புரிந்து அதற்கு ஏற்ப இடைவெளி தருதல் அவசியமாகிறது.
முதலிரவில் உடலுறவு கொள்ளாவிட்டால்:
கவலை வேண்டாம். முதலிரவில் உங்களால் உடலுறவில் ஈடுபட முடியவில்லை என்றாலும், அதனால் வருத்தம் கொள்ளாதீர்கள். உங்கள் இருவரை பற்றிய புரிதலுணர்வு அதிகரித்தாலே, இதற்கான தருணம் என்பது தானாக அமையும் வாய்ப்பானது உங்கள் இருவருக்கும் ஏற்படும்.