மாதவிடாயின் போது உடலுறவு கொள்ளலாமா? (அவ்வப்போது கிளாமர்)

Read Time:4 Minute, 15 Second

தம்பதியர்கள் உடலுறவு அனுபவம் ஏற்பட்ட பின்பு, சில தம்பதிகள் தினந்தோறும் உடலுறவு கொள்ள வேண்டும் என எண்ணுவதுண்டு. ஆனால், அவர்களின் எண்ணத்திற்கு மாதவிடாய் ஒரு தடையாக அமைந்துவிடுகிறது. இன்னும் சிலருக்கோ இந்த மாதவிடாய் நாட்களில் உடலுறவு கொள்ளலாமா கூடாதா என்ற சந்தேகம் மனதில் தோன்றி, அவர்களை துளைத்தெடுக்கிறது. இந்த சந்தேகங்களை சங்கடங்களை தீர்க்கும் வகையிலே இந்த பதிப்பை அளிக்கிறோம். படித்துத் தெளியவும்..!

தவறில்லை..!
மாதவிடாய் நாட்களில் உடலுறவு கொள்ளலாமா என்றால், ஆம் கொள்ளலாம், தவறில்லை. ஆனால், மாதவிடாய் காலத்தில் பெண்களை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ளக்கூடாது

வலிகள் குறையும்..!

பொதுவாக மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதால் பல நன்மைகள் உண்டாகலாம். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வயிற்று வலி, மன உளைச்சல், மன அழுத்தம் போன்றவை ஏற்படலாம். இப்பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் மாதவிடாய் நேரத்தில், உறவில் ஈடுபடும் போது இப்பிரச்சனைகள் குறைய வாய்ப்புண்டு.

தவறவிடாதீர்கள் :: திருப்தியான உறவுக்கு ஏற்ற திருமண வயது எது தெரியுமா..?

திருப்தி..!

மேலும் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபடும் போது மற்ற நேரங்களை விடபெண்களுக்கு அதிக திருப்தி கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

காரணம்: மாதவிடாய் நேரத்தில் பெண்களின் உறுப்புக்கள் அனைத்தும் ஹார்மோன்களால் மாற்றமடைந்து காணப்பட்டு உறவின் மகிழ்ச்சியை கூட்டலாம்.

மூட நம்பிக்கை
மேலும் நம்மிடமுள்ள தவறான நம்பிக்கை போல இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவதால் ஆணுக்கோ அல்லது பெண்ணின் கருப்பைக்கோ எந்தவிதமான பாதிப்பு ஏற்படுவதில்லை.

வாய்ப்பு குறைவு..!
இக்காலத்தில் உறவில் ஈடுபட்டால் கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பம் மிகவும் குறைவு. ஆனாலும் மிகவும் அரிதாக இந்தக் காலத்திலும் கருத்தரித்தல் நடைபெறலாம். ஆகவே குழந்தை பிறப்பைத் தவிர்க்க விரும்புபவர்கள் நிச்சயமாக கருத்தடை முறைகளை பின்பற்ற வேண்டும்.

விளைவுகள்..!
1. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இரத்தப்போக்கு இருப்பதால் பலவீனமாக இருப்பார்கள், இந்நேரத்தில் உடலுறவு கொண்டால், அது அவர்களின் பலவீனத்தை மேலும் அதிகமாக்கும்

2. உடலுறவில் விருப்பமில்லாமல் போகலாம்

3. இரத்தப்போக்கு இருப்பதால் ஆண்களுக்கு சங்கடம் ஏற்படலாம்

4. மாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபடும் போது பால்வினை நோய்கள் தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகம்; சிபிலிஸ் (Syphilis), கல்லீரல் அலர்ச்சி (Hepatitis B), போன்ற நோய்கள் இருந்தால் இது மற்றவருக்குத் தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகம்

5. பெண்ணின் பிறப்புறுப்பில் முத்தமிடல், நாக்கு வழித்தூண்டல் முதலியவற்றை செய்யக்கூடாது

6. இரத்த வாடை இருவருக்கும் அருவருப்பை ஏற்படுத்தலாம்

7. காண்டம் உபயோகிப்பது நோய் தொற்றைக் கட்டுப்படுத்தும், எனவே இந்நேரத்தில் தவறாமல் காண்டம் உபயோகிப்பது நல்லது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆண் பெண் – தகாத உறவுகளுக்கு காரணம் என்ன? (அவ்வப்போது கிளாமர்)
Next post கணவன் – மனைவியை தீர்மானிப்பது முதலிரவா? (அவ்வப்போது கிளாமர்)