நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியுடன் நீண்ட பேச்சுவார்த்தை

Read Time:2 Minute, 21 Second

erick1.jpg
இலங்கைக்கு விஜயம் செய்த நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெம் இன்று (26.05.2006) முற்பகல் அலரிமாளிகையி;ல் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார். சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்ட இந்த சந்திப்பு 2 மணி நேரம் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது இலங்கைக்கான சமாதான து}துவர் ஜோன் ஹன்சன் பௌவர், இலங்கைக்கான நோர்வே து}துவர் ஹன்ஸ்பிரட்ஸ்கர் ஆகியோரும் உடனிருந்தனர். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சமாதான செயலக பணிப்பாளர் பாலித கொகென்ன, கோத்தபாய ராஜபக்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியுடன் சமாதானப் பேச்சுக்களின் தற்போதைய நிலைபற்றி நீண்ட ஒரு பேச்சுவார்த்தையை நடத்தினேன். பல்வேறு விடயங்கள் குறித்தும் விவாதித்தோம் அது குறித்த விபரங்கள் எதனையும் தற்போது வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார்.

சமாதான பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கான நடவடிக்கைகளை இரண்டு தரப்பும் முயற்சிக்க வேண்டும். நான் கிளிநொச்சிக்கு செல்லமாட்டேன் நாளை ஜோன் ஹன்சன் பௌவர் அவர்கள் கிளிநொச்சி செல்ல உள்ளார் என்று தெரிவித்த நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் புதுடில்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து அவர் டோக்கியோவில் நடைபெறவுள்ள இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்திற்குச் செல்லவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இரு இளைஞர்கள் நேற்று விமான நிலையத்தில் கைது
Next post கைது செய்யப்பட்ட அகதிகள்