வயதானவர்களும் பயணம் செய்யலாம் ஜாலியா! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 9 Second

கோடை விடுமுறை துவங்கியாச்சு… எங்கு சுற்றுலா போகலாம்னு எல்லோரும் திட்டம் போட ஆரம்பித்திருப்பார்கள். பயணம் செய்யும் முன் என்னெல்லாம் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்ன்னு ஒரு பெரிய லிஸ்ட்டே போடுவோம். எல்லாவற்றையும் விட இப்போதுள்ள தொழில்நுட்பத்தில் எங்கு தங்கலாம், எப்படி பயணம் செய்யலாம் என அனைத்தையும் நம் விரல் நுனியில் கொண்டு வந்துவிடுகிறது. 20 முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் செல்போனிலேயே அனைத்தையும் சுலபமாக பார்த்து அதன் படி சுற்றுலாவினை கழிக்க திட்டமிடுவார்கள்.

அவர்கள் மட்டும் தான் விடுமுறையினை கழிக்க முடியுமா என்ன? வயதானவர்களாலும் இதனை பின்பற்றி தங்களின் சுற்றுலா பயணத்தை எந்த வித தடையின்றி இன்பமாக கழிக்க முடியும் என்கிறார்கள் ஃபேர்போர்டல் நிறுவனத்தினர். உலகளவில் தொழில்நுட்ப உதவியுடன் அனைவரும் சுற்றுலா மேற்கொள்ள உதவும் இந்த நிறுவனம் வயதானவர்கள் தங்களின் பயணத்தை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது குறித்து சில யோசனைகள் வழங்கியுள்ளனர்.

*உங்களின் பயணத்தை உங்களுக்கு ஏற்ப அமைத்துக் கொள்வது அவசியம். சில சமயம் நீங்கள் திட்டமிட்ட தேதியின் முன் பின் இருந்தாலும் அதனால் ஒரு குறிப்பிட்ட தொகை சேமிக்க முடியும் என்றால் அதன் படி திட்டமிடுங்கள்.

*பொதுவாக வார இறுதி நாட்களில்தான் பயணம் மேற்கொள்வார்கள். வயதானவர்களுக்கு அலுவலகம் செல்ல வேண்டும், குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகள் கிடையாது. அதனால் ஆட்டு மந்தை கூட்டத்திற்கு நடுவில் வார இறுதி நாட்களில் சிக்கிக் கொள்ளாமல், வார நாட்களில் ரிலாக்சாகவும் ஃப்ரீயாகவும் சுற்றிப் பார்க்கலாம்.

*ஆஃப் சீசனில் திட்டமிடலாம். சீசனின் போது கூட்டம் அதிகமாக இருக்கும். தங்குவதற்கான ஓட்டல் அறைகள் கிடைக்காது. அப்படியே கிடைச்சாலும் அதன் விலை மற்ற நாட்களைவிட இரண்டு மடங்காக இருக்கும். இதைத் தவிர்க்க ஆஃப் சீசனில் பயணிக்கலாம். சீசன் ஆரம்பிக்க இருக்கும் ஒரு வாரமோ அல்லது முடிந்த அடுத்த வாரம் கூட திட்டமிடலாம். பணமும் மிச்சமாகும். அதே சமயம் கூட்ட நெரிசல் இல்லாமல் அழகான இடங்களை தனிமையில் கண்டு மகிழலாம்.

*சமூகவலைத்தளத்தின் வளர்ச்சி காரணமாக டிராவல் ஏஜென்சிகள் பலர் அதிகரித்துவிட்டனர். இவர்கள் செல்லும் இடம் அங்குள்ள வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பதிவிடுகிறார்கள். அதைப் பின்பற்றி திட்டமிடலாம்.

*நம்மூரில் கார், ஆட்ேடா மற்றும் உணவுக்கு என தனிப்பட்ட ஆப்கள் உள்ளன. அதேபோல் நாம் செல்லும் ஊர்களிலும் இருக்கும். அவை என்ன என்று அறிந்து அதன் மூலம் நீங்கள் சுற்றிப் பார்க்க இருக்கும் இடங்களுக்கு செல்ல திட்டமிடலாம். இனி என்ன யோசனை… உங்களின் கோடை விடுமுறையினை ஜாலியாக கொண்டாடலாமே!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உணர்வுப்பூர்வமான நட்புக்கு நான் அடிமை! ‘மிஸ்டர் மனைவி’ நாயகி ஷபானா!! (மகளிர் பக்கம்)
Next post கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா!! (மருத்துவம்)