தாம்பத்தியத்தில் உடல்நலத்தின் முக்கிய பங்கு!! (அவ்வப்போது கிளாமர்)
தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன் – மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கியம் என்பதை பார்த்தோம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும, காய்கறிகள், பழங்கள், கீரைகள், போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* எந்த சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது.
* சாப்பிட்டதும் உடலுறவை வைத்துக்கொள்ள கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால் செயல்பாடுகளில் ஆர்வம் காட்ட முடியாது.
* உறவுக்கு முன் இனிமையான உரையாடலும் உணர்வு பரிமாற-லும் முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும்.
* தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம் இசைப்பதும், ரசிப்பதும், மென்மையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும், ஆவேசமும், அவசரமும் காட்டினால் தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும்.
* கோபம் சண்டையை தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸுக்கு உண்டு. ஆனால் மன் ஒற்றுமை, ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையை தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும் ஒரு ஆழ்ந்த மனபாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரியாகும்.
* தாம்பத்தியத்தில் ஒரே மாதிரி செயலாற்றும் இயந்திர தனங்கள் இனிமை தராது. அதே நேரத்தில் அளவுக்கு மீறிய எல்லா மீறல்களும் சிக்கலில் விட்டுவிடும்.
* மனமும் உடலும் உத்துழைக்கும் வரை அடிக்கடி உறவு கொள்ள முடியும் என்றாலும் தம்பதிகள் தங்களுக்கும் சில கட்டுபாடுகள் விதித்துக் கொண்டால் உறவு பற்றி ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்து இன்பமு அடைய முடியும்.
* வயது அதிகரித்ததும் குழந்தை வளர்ந்ததும் தாம்பத்திய உளவு கொள்வது பாவம் என்று நினைக்க தேவையில்லை, இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல.
* கணவன் – மனைவி அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அதை முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
* செக்ஸில் எதுவுமே தவறில்லை என்பதால் இப்படி பேசினால் அநாகரிகம் அப்படி செய்தால் அநாகரிகம் என்று எண்ணத் தேவையில்லை. படித்தவர்கள் நல்ல வேலையில் இருப்பவர்கள் இது போன்று எல்லாம் செய்யக் கூடாது என்று தங்களுக்குள் கட்டுப்பாடு விதித்துக்கொள்ள கூடாது. இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே சுகமான அனைத்துமே சுகமான அனைத்துமே பாலியல் வாழக்கை நெறிப்படி சரியானது தான்.
* தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதில்லை. ஆணுக்கு அடிக்கடி ஆசை ஏற்படும் என்றாலும் பெண்ணுக்கு தொல்லைதரக் கூடாது என்று அடக்குபவர்கள் அதிகம். இதை மனைவி புரிந்து கொள்ளாத பட்சத்தில் மனைவி மீது வெறுப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாது. எனவே ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க வேண்டும்.
* அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு. அவர்களது விருப்பத்தை ஆண்கள் உதாசீனப்படுத்தாமல் முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
* செக்ஸ் இணையதளங்கள் பார்ப்பது, செக்ஸ் புத்தகம் படிப்பது, சிடி பார்ப்பது போன்றவை என்றாவது ஒருநாள் என்றால் ஏற்றுக்கொள்ள கூடியதே. ஆனால் அது இல்லாமல் உறவு கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தம்பதிகள் தெளிவாக இருக்க வேண்டும்.
* தாம்பத்திய உறவை அதிகரிக்கும் சக்தி, கீரை மற்றும் பழங்களுக்கும் உண்டு. மீன், புறா, வெள்ளாட்டுக்கறி, இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரீச்சம்பழம், பதாம்பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் – பெண் உறவுக்கு வலிமையும், இனிமையும் சேர்க்க கூடியவை.
* உடல் சூடாக இல்லாமல் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உறவுக்குள் நுழையும் முன் தம்பதியர் இருவரும் குளித்தல் நல்லது. குளிக்க முடியாத பட்சத்தில் உடலை நன்றாக தேய்த்துக் கழுவி வாசனைத் திரவியங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
* இருவரும் தூக்கத்துக்கு போகும் முன் கலவி நேரத்தை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அலுவலக வேலையை முடித்து விட்டு நள்ளிரவில் வந்து வீடடில் இருக்கும் மனைவியிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள கனவன் நினைத்தால் அவள் தயாராக இருக்க மாட்டாள். ஏனெனில் நீண்ட நேரம் கணவனுக்காக காத்திருந்து ஏமாந்து போயிருக்கும் அவளால் உடனடியாக கலவிக்கு தயாராக முடீயாமல் போகும்.
* தாம்பத்தியத்தில் பெரும் குறையாக இருப்பது தம்பதிகளின் அவசர உடலுறவு ஆகும். யாருமற்ற நேரம், இடம் போன்றவற்றை தேர்வு செய்து தொந்தரவு இல்லாமல் உறவை அனுபவிக்கும் போது மட்டுமே இன்பத்தின் எல்லைவரை செல்ல முடியும். கூட்டு குடும்பத்தினருக்கு இது பெரும் குறையாக இருந்தால் இதற்கென சுற்றுலா செல்லும் வாய்ப்புகளை உருவாக்குதல், தாய் வீட்டுக்கு கணவனை அழைத்துச் செல்லுதல் போன்றவை அவசியமானதாகும்.
* தம்பதிகளுக்குள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய சொல் கூச்சம். எதற்காகவும் எப்போதும் கூச்சப்படாமல் உறவில் இறங்கும் போது தான் இருவரும் ஆசைப்பட்டதை கேட்கவும் கொடுக்கவும் முடியும்.
குறிப்பாக ஆணும் பெண்ணும், தாம்பத்தியத்தில் இன்பத்தின் எல்லைவரை சென்று உச்சக்கட்டம் என்ற முத்தெடுத்து சந்தோஷமாக வாழ முடியும் என்பதை இதுவரை சொல்லி அதற்கான வழிமுறைகளையும் சொல்லி இருக்கிறோம்.