காக்கும் கை வைத்தியம் 20!! (மருத்துவம்)
*அரச மரத்தின் பாலை பாதத்தில் காணும் பித்த வெடிப்புகளுக்குத் தடவிவர குணமாகும்.
*நகப்புண்களுக்கு மருதானி இலையை அரைத்து, புண் மீது வைத்துக்கட்ட விரைவில் குணமாகும்.
*மருதாணிப் பூவை இரவில் தலையணையின் கீழ் வைத்துப் படுக்க நல்ல தூக்கம் வரும்.
*அருகம்புல்லின் ஊறல் நீருடன் பால் சேர்த்து உட்கொள்ள, தலைநோய், கண் புகைதல் ஒழியும்.
*அருகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்தரைத்துத் தடவிவர, சொறி, சிரங்கு, படர் தாமரை சரியாகும்.
*அன்னாசி இலையைச் சாறு பிழிந்து, அதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து 1 தேக்கரண்டி உட்கொள்ள, விக்கல் நிற்கும்.
*ஆலம் பட்டையை நீர்விட்டு ஊறவைத்து, அதில் வாய் கொப்பளித்துவர வாய்ப்புண், வாய் நாற்றம், நாவெடிப்பு, ஈறுப்புண் குணமாகும்.
*ஆவாரம் பூவுடன், பச்சைப்பயறைச் சேர்த்தரைத்து, குளிக்க உடலில் தோன்றும் நமைச்சல்கள் நீங்கும்.
*இஞ்சியை வாயிலிட்டு மென்று, உமிழ்நீரைத் துப்ப தொண்டைப்புண், குரல் கமறல் குணமாகும்.
*உணவு செரியாமல் கழிச்சல் ஏற்படும்போது, இஞ்சிச் சாற்றை, தொப்புளைச் சுற்றித் தடவலாம்.
*உளுந்தை வடையாகச் செய்தும், கஞ்சியாகக் காய்ச்சியும் உண்கின்றவர்களுக்கு இளைத்த உடல் பெருக்கும்.
*கடுக்காயைப் பொடி செய்து, பல் துலக்க, ஈறுவலி, ஈறிலிருந்து வடியும் ரத்தம் நிற்கும். வீக்கம் ஆறும். பல்லிறுகும்.
*கஸ்தூரி மஞ்சளை அரைத்து, தேய்த்துக் குளிக்க, கரப்பான், புண் இவை போகும்.
*கம்பு மாவின் கூழ் உடம்பினைத் தூய்மையாக்கும்.
*கற்பூரவல்லி இலைச்சாற்றுடன் கற்கண்டு சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க இருமல் நிற்கும்.
*மஞ்சள் மெழுகும் சர்க்கரையும் சேர்த்து குழப்பிப் பருக்களுக்குப் போடலாம்.
*காளானை அரைத்து மார்பில் பற்றிட, முலைப்பால் சுரப்பைக் முறைப்படுத்தும்.
*பருப்புக் கீரையின் தண்டை அரைத்து, வேர்க்குரு, கைகால் எரிச்சலுக்குப் போடலாம்.
*கொத்துமல்லி இலை யை எண்ணெய் விட்டு வதக்கி, வீக்கம் கட்டிகளுக்குக் கட்ட, சீக்கிரம் கரைந்து போகும் அல்லது பழுக்கும்.
*மல்லி விதையை வாயிலிட்டு மெல்ல, வாய் நாற்றம் நீங்கும்.
*சூடான கொள்ளுச் சாற்றை உட்கொள்ள இளைத்த உடல் பருத்து உரமடையும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...