ஜலதோஷத்தை நீக்கும் முசுமுசுக்கை!! (மருத்துவம்)
*முசுமுசுக்கைக் கீரை சளி மற்றும் இருமல் சம்பந்தமான எல்லாப் பிரச்னைகளையும் போக்கவல்லது.
*இலைகள் வெளிர் பச்சை நிறமானவை. தமிழகமெங்கும் வேலிகள், புதர்களில் பெரு மரங்களைச் சுற்றி இதனை காணலாம்.
*இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயன்மிக்கவை. இரைப்பிருமல் குணமாக இலையை நிழலில் காய வைத்து தூள் செய்து வைத்துக்கொண்டு 120 கிராம் அளவு தூதுவளை இலைத்தூளுடன் 80 கிராம் அளவு முசுமுசுக்கைக் கீரையை ஒன்றாக கலந்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் 1/2 தேக்கரண்டி அளவு வெண்ணெயில் கலந்து சாப்பிட வேண்டும்.
*சீதளத்தினால் ஏற்படும் ஜலதோஷத்தை நீக்கவல்லது. காசநோயால் அவதியுறுவோருக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். இதைத்தொடர்ந்து சாப்பிட்டுவர நோய் குணமாகும்.
*இந்தக் கீரை மட்டுமன்றி இதன் கிழங்கைக்கூட மருத்துவத்திற்குப் பயன்படுத்துகின்றனர். இதுவும் காச மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களை நிவர்த்தி செய்யக்கூடியது.
*முசுமுசுக்கைக் கீரையை இடித்து சாறு எடுத்து நல்லெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி தலைக்கு எண்ணெயாகவும், தலை குளிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.
*கண் எரிச்சல், உடல் எரிச்சல் குணமாக இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இருமுறை தலை முழுக வேண்டும்.
*வாந்தி குணமாக வேரை உலர்த்தி தூள் செய்து கொண்டு ஒரு டம்ளர் நீரில் அந்த பொடியினை 1/2 தேக்கரண்டி அளவு சேர்த்து தண்ணீர் பாதியாகும் வரை சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
*முசுமுசுக்கைக் கீரையை அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை செய்தும் சாப்பிடலாம். 3 பிடி இலைகளை 1/4 கிலோ அரிசியுடன் சேர்த்து, அரைத்து மாவாக்கி, தோசை செய்து சாப்பிட வேண்டும். காய்ச்சல், சளியுடன் கூடிய காய்ச்சல், நாக்குச் சுவையின்மை ஆகியவை தீரும். இதையே துவையலாகவும் செய்து சாப்பிடலாம். இரைப்பிருமல், மூக்குப்புண் போன்றவை குணமாகும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...