பச்சிளம் குழந்தைக்கான உணவுமுறை! (மருத்துவம்)
உடல் வளர்ச்சிக்கும், இரத்தத்தின் கன அளவை அதிகரிக்கவும், இரும்புச்சத்து சேமிப்பை கூடுதலாக்கவும் இளங்குழவிக்கு இரும்புச் சத்து தேவைப்படுகிறது. இரும்புச்சத்து கிடைக்கும் அளவு மற்றும் உறிஞ்சப்படும் அளவைப் பொருத்து 1 மி.கி/கி.கி உடல் எடை / தினம் என்ற அளவில் இரும்புச்சத்து இளங்குழவிகளுக்குத் தரப்படலாம். ஆனால் ICMR இரும்புசத்துக்கு எந்தவித பரிந்துரையும் கீழ்கண்ட காரணங்களால் செய்யவில்லை.
அ. இளங்குழந்தை பிறக்கும்போதே நான்கு மாதங்களுக்குப் போதுமான சேமிப்புடன்தான் பிறக்கிறது. பிறந்தவுடன் 17 கிராம்/100 மி.லியாக இருக்கும் ஹீமோகுளோபின் அளவு 2 வாரங்களுக்குப் பிறகு 11 கிராம்/100 மி.லியாக குறைகிறது. ஹீமோகுளோபின் சிதைவுறுவதால் அப்போது வெளிப்படும் இரும்புச்சத்து, பிற்பாடு உபயோகப்படுத்துவதற்கென சேமித்து வைக்கப்படுகிறது.
ஆ. தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்கு, தாய்பாலில் கிடைக்கும் இரும்புச்சத்து குறைவாக இருந்தாலும், உயிரியல் முறைகளில் கிடைக்கும் இரும்புச்சத்து (bio available iron) அவர்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு உள்ளது.
இளங்குழந்தைகள் உடலிலிருந்து வீணாகும் இரும்புச்சத்தின் அளவு தெரியாததால் அதை ஈடுசெய்ய வேண்டிய அளவும் மதிப்பீடு செய்ய முடியாது.
வைட்டமின்கள்
ஊட்டமிக்க தாயின் பாலை குடிக்கும் குழந்தைகளை அடிப்படையாக கொண்டு இளங்குழவிப் பருவம் முழுவதும் தினசரி 350 மிகி வைட்டமின் A தேவை என ICMR பரிந்துரைத்துள்ளது.
கொழுப்பில் கரையும் மற்ற வைட்டமின்கள்
வைட்டமின்கள் D, E மற்றும் K விற்கான எந்த பரிந்துரையும் ICMR செய்யவில்லை. நல்ல சூரிய வெளிச்சம் குழந்தையின் உடலில் பட்டாலே, அவர்களுக்குத் தேவையான 200-400 I.U வைட்டமின் D கிடைத்துவிடும்.
B தொகுப்பு வைட்டமின்கள்
B தொகுப்பு வைட்டமின்கள் தேவைப்படும் அளவு, குழந்தையின் உடல் எடையைப் பொருத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குழந்தையின் எடை அதற்கு கிடைக்கும் கலோரிகளின் அளவைப் பொருத்து அமைகிறது.தாய்ப்பால் முழுமையாக குடிக்கும் குழந்தைகளுக்கு, தேவையான அளவு தையாமினும், ரைபோபிளேவினும் கிடைத்துவிடுகிறது. முதல் ஆறு மாதங்களுக்கு 55 மை.கி/கி.கி உடல் எடை தயாமினும் 65 u.கி/கி.கி உடல் எடை ரைபோபிளேவினும், அடுத்த ஆறு மாதங்களுக்கு 50 u.கி/கி.கி உடல் எடை தயாமினும் 60 u.கி/கி.கி உடல் எடை ரைபோபிளேவினும் தேவைப்படுகிறது.
நையாசின் அளவுகள், பெரியவர்களைப் போலவே இவர்களுக்கும் கணக்கிடப்படுகிறது. அதாவது 6.6u.கி/1000 கி.கி அதையே உடல் எடைக்கு ஏற்றாற் போல் குறிப்பிடும் போது 710 மை.கி/கி.கி உடல் எடை முதல் ஆறு மாதங்களுக்கும், 650uகி/ கி.கி உடல் எடை அடுத்த ஆறு மாதங்களுக்கும் தேவைப்படும்.தாய்ப்பாலில் காணப்படும் போலிக் அமிலத்தின் அளவைப் பொருத்து இளங்குழவிக்கான தேவைகள் கணக்கிடப்படுகிறது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குச் சாதாரணமாக தினசரி 25 முதல் 30 uகி/கி.கி உடல் எடை போலிக் அமிலம் கிடைக்கிறது. அது முழுவதும் உறிஞ்சப்படுகிறது. எனவே தினசரி 25 யகி/தினம் போலிக் அமிலம் போதுமானது தினசரி 02u.கி/கி.கி உடல் எடை வைட்டமின் B, பெறும் இளங்குழந்தைகளுக்கு இரத்த உற்பத்தி சரியான அளவில் காணப்படுகிறது. ஆனால் 0.05 u.கி தினம் பெறும் குழந்தைகளுக்கு வைட்டமின் குறைவு நோய் குறியீடுகள் காணப்படுகிறது. எனவே தினசரி 02 u.கி வைட்டமின் B, பரிந்துரைக்கப்படுகிறது.
வைட்டமின் C
நாள் ஒன்றுக்கு 25 மி.கி வைட்டமின் C உட்கொள்ள வேண்டுமென்று ICMR பரிந்துரைத்துள்ளது. ஹீம் (Heam) வகையைச் சாராத இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதற்கு வைட்டமின் C உதவுவதைக் கருத்தில் கொண்டு இந்த அளவு கணக்கிடப் பட்டுள்ளது.
தாய்ப்பால் கொடுத்தல் (Breast feeding)
பிறந்தது முதல் 4-6 மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளின் வளர்ச்சி, மிகவும் சிறப்பாக இருக்கும். தாய்ப்பால் குடிப்பது, குடிக்கும் காலத்திற்கு மட்டுமல்லாது அவர்கள் வளர்ந்த பிறகும் நல்ல பயன்களை அளிக்கக் கூடியது. சுகப்பிரசவம் முடிந்த அரைமணி நேரம் கழித்து குழந்தைக்குத் தாயால் பாலூட்டப்படுகிறது.
சீம்பால் (கொலஸ்டிரம் – Colostrum)
குழந்தை பிறந்த இரண்டு, மூன்று நாட்களுக்கு, சிறிய அளவுகளில் ஏறக்குறைய 10-40 மி.லி சீம்பால் சுரக்கும்.
சீம்பாலில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்
ஊட்டச்சத்து அளவு/100மி.லி சக்தி (கி.கி) 58
கொழுப்பு (கிராம்) 29
கால்சியம் (மி.கி) 31
பாஸ்பரஸ் (மி.கி) 14
இரும்புச்சத்து (மி.கி) 0.09
புரதம் (கிராம்) 27 லாக்டோஸ் (கிராம்) 5.3
கரோட்டீன் (1U) 186
சீம்பாலில், வைரஸை எதிர்க்கும் செயல்பாட்டை (antiviral activity) உடைய இன்டர்பெரான் (interferon) போன்ற பொருட்கள் காணப்படுகின்றன.இதில் B, ஐ இணைக்கும் புரதம் உள்ளது. இதனால் எ.கோலி மற்றும் பிற பாக்டீரியாக்கள் வளர்வதற்கு B, கிடைக்காமல் போய்விடுகிறது. இதில் வைரஸ் தொற்றுக்களை எதிர்க்க கூடிய எதிர் உயிர் பொருட்கள் (antibodies) உள்ளது. செல் முதிர்ச்சியை மேம்படுத்தும் லைசோசைம் (lysozyme) மற்றும் பெர்ஆக்ஸிடேஸ் (peroxidase) ஆகியவை அதிக அளவு சீம்பாலில் காணப்படுகிறது.
தாய்ப்பாலூட்டுவதால் ஏற்படும் நன்மைகள்
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுவதே ஒரு எளிய, சிறந்த வழியாகும். இதில் கீழ்கண்ட நன்மைகள் உள்ளன.தாய்ப்பாலில் புரதத்தின் அளவு குறைவு. ஆனால் பால் சர்க்கரையாகிய லாக்டோஜின் அளவு அதிகம். கொழுப்பின் அளவும் குறைவு. புரதத்தின் அளவு குறைவாக இருப்பது இளங் குழவிகளுக்கு பயனளிக்கிறது. ஏனெனில் கூடுதல் நைட்ரஜனை வெளியேற்ற சிறுநீரகங்கள் சிரமப்படத் தேவையில்லை. பாலில் இருக்கும் புரதமும், லாக்டோ ஆல்புமின் என்ற கூட்டுப்பொருளாக காணப்படுகிறது. இது பசும்பாலில் காணப்படும் புரதத்தை விட எளிதில் சீரணிக்கக்கூடியதுலாக்டோஸ் பாலுக்கு இயற்கையான இனிப்பைத் தருவதுடன், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உறிஞ்சப்படுதலுக்குத் துணைபுரிகிறது. கொழுப்பு அளவில் குறைந்து காணப்பட்டாலும் அது சிறு சிறு திவலைகளாக உள்ளதால் (emulsified) எளிதில் சீரணிக்கிறது.
தாய்ப்பாலில் காணப்படும் லிப்பிடுகள்
செறிவற்ற கொழுப்பு அமிலங்கள், முக்கிய கொழுப்பு அமிலங்கள், புரோஸ்டா கிளான்டின் தயாரிக்க உதவும் காரணிகள் (prostaglandin precursors) கொழுப்பில் கரையும் வைட்டமின்கள், பாஸ்போலிப்பிடுகள் மற்றும் கொலஸ்டீரால். விலங்குகளிடமிருந்து கிடைக்கும் பாலில் உள்ளதை விட தாய்ப்பாலில் வைட்டமின் C கூடுதலாக காணப்படுகிறது.
மேலும், தாய்ப்பாலை வெப்பப்படுத்தாததால் இந்த வைட்டமின் அழிவதில்லை. ஆனால் பசும்பாலை சூடுபடுத்தும்போது வைட்டமின் C அழிந்து விடுகிறது. உயிரியல் முறையில் கிடைக்கும் இரும்புச்சத்து, தாய்ப்பாலில் காணப்படும் லாக்டோபெரின் (lactoferrin) என்ற இணைவுப் புரதத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. அதேபோல பசும்பாலை விடக் குறைவாகத் தாய்ப்பாலில் கால்சியம் காணப்பட்டாலும், அது சிறப்பாக இளங்குழவியின் உடலில் தன்மயமாகிறது.
ஹார்மோன்கள் மற்றும் வளர்ச்சிக் காரணிகள்
தாய்ப்பாலில், தைராய்டு ஸ்டிமுலேடிங் ஹார்மோன் (Thyroid stimulating Hormone – TSH), thyroxin, Insulin மற்றும் புரோலாக்டீன் (prolactin) மிக அதிக அளவில் காணப்படுகிறது. அது மட்டுமல்லாது தாய்பாலில் வளர்ச்சியை ஒழுங்குப்படுத்தும் காரணிகளும் (growth regulatory factors) வளர்ச்சி ஊக்கிகள் (growth promoters) மற்றும் வளர்ச்சி மாற்றிகள் (growth modulators) ஆகியவை காணப்படுகின்றன.
நோய் தடுப்புக் காரணிகள்
தாய்ப்பாலில் காணப்படும் கீழ்கண்ட பொருட்கள், குழந்தைக்கு எதிர் விளைவு குறைவான நோய்த்தடுப்பை (passive 64 immunity) ஏற்படுத்துகிறது.இவை பாக்டீரியாக்களைச் சீரணித்து, மேலும் தொற்றுநோய்களுக்கெதிரான நோய்த் தடுப்பை ஏற்படுத்துகிறது. லிம்போசைட்டுகள், இண்டர்பெரான் (interferon) போன்ற வைரஸ் எதிரி (antiviral) பொருட்களை உற்பத்தி செய்கின்றன. லிம்போசைட்டுகள், லிம்போகைன்கள் (lymphokynes) மற்றும் வளர்ச்சிக் காரணிகளைத் தயாரிக்கின்றன. லிம்பாய்டு திசுக்கள் (lymphoid tissue) உற்பத்தி, வேறுபாடு மற்றும் ஆன்டிஜன்களுடன் (நோயை உண்டாக்கும் நச்சுப் பொருள், antigen) வினைபுரியும் திறனை அதிகரிக்கின்றன.
லாக்டோபெரின் (lactoferrin)
இது ஒரு இரும்புச்சத்தை இணைக்கும் புரதமாகும். எ.கோலி போன்ற பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்குத் தேவையான இரும்புச்சத்தை இவை இணைத்துக் கொள்வதால், பாக்டீரியாவின் வளர்ச்சி தடைசெய்யப்படுகிறது. லாக்டோபாசில்லஸ் பைபிடஸ் வளர்ச்சிக் காரணி (Lactobacillus bifidus factor)இது ஒரு அமினோ சர்க்கரை (amino Sugar). இது லாக்டோ பாசில்லஸ் பைபிடஸ் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த பாக்டீரியா லாக்டோஸிலிருந்து அசிட்டிக் அமிலம் அல்லது லாக்டிக் அமிலம் தயாரிக்கிறது. இந்த அமிலங்கள் நோயை உண்டாக்கும் மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.
என்ஸைம்கள்
தாய்ப்பால், லிப்பேஸ், அமிலேஸ் மற்றும் லாக்டோபெர் ஆக்ஸிடேஸ் ஆகிய என்ைஸம்களை வழங்குகிறது. இவை செரித்தலை மேம்படுத்துவதோடு, தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளையும் அழிக்கின்றன.
இம்யூனோ குளோபுலின் (immunoglobulin)
இவை அனைத்து வகையான ஆன்டிபாடிகளையும் (நோய் எதிர்ப்புப் பொருட்கள் – antibodies) உள்ளடக்கிய பாதுகாப்புப் புரதங்கள் ஆகும். தாய்ப்பாலில் அதிக அளவு காணப்படும் இம்யூனோ குளோபுலின் A, போலியோ வைரஸ், ஸ்ரெப்டோ காக்கஸ் ஆகியவற்றிற்கு எதிர்ப்பாக உடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது.
பொருளாதாரக் காரணிகள்
தாய்ப்பாலே குழந்தைக்குக் கொடுக்கக் கூடிய மிக விலைகுறைந்த உணவுப் பொருளாகும். தாய்ப்பால் சுரப்பதற்காக தாய் உண்ணும் கூடுதல் உணவின் செலவைக் கணக்கிட்டால்கூட மற்ற செயற்கை உணவுப்பொருட்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தாய்ப்பால் மிகவும் விலைகுறைவான ஒரு பொருளாகும்.