கஸ்தூரி மஞ்சள் செய்யும் மாயாஜாலம்! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 21 Second

மஞ்சளில் ஏராளமான ஆரோக்கிய குணங்கள் அடங்கியிருப்பது நம் அனைவருக்கும் தெரியும். பாக்டீரியா எதிர்ப்பு தன்மை, வயதான தோற்றத்தினை குறைக்கும் திறன், அழற்சியினை கட்டுப்படுத்துதல் என பல்வேறு நலன்கள் உள்ளது. இதன் காரணமாக மஞ்சள் சரும ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறிது மஞ்சளை தண்ணீரில் கலந்து சாப்பிட்டாலே உடலில் உள்ள புண்கள் ஆறும். அதே போல் காட்டு மஞ்சள் என்று அழைக்கப்படும் கஸ்தூரி மஞ்சளில் சரும நலன்கள் அடங்கியுள்ளது. சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் இது தீர்வு அளிக்கிறது.

கஸ்தூரி மற்றும் இதர மஞ்சளின் வித்தியாசம்

*கஸ்தூரி மஞ்சள் பார்க்க மஞ்சள் நிறத்தில் இருந்தாலும், மற்ற மஞ்சளைப் போல் சருமத்தில் மஞ்சள் கறை படியாது.
*இது வாசனை நிறைந்தது என்பதால் சருமத்தில் ஒரு வித நறுமனம் கமழ செய்யும்.
*சமையலுக்கு பயன்படுத்த முடியாது. அழகு சாதனப் பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியது.

கஸ்தூரி மஞ்சளின் நன்மைகள்

*இதில் பாக்டீரியா எதிர்ப்பு சக்தி இருப்பதால், சருமத்தில் முகப்பரு வராமல் தடுக்கிறது. மேலும் சருமத்தில் உள்ள அதிக அளவு எண்ணைப் பசையினை குறைத்து, முகப்பரு உருவாக்கும் கிருமிகளை அழித்து பருக்களால் ஏற்படும் தழும்பினை மறைய செய்கிறது.

*ரோஜா பன்னீருடன் இதனை குழைத்து முகத்தில் பூசி வர சருமம் பளிச்சிடும். கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் நீங்கும்.

*முகத்தில் உள்ள சிறிய முடிகளை இயற்கையான முறையில் நீக்கும் தன்மை கொண்டது. கொண்டைக்கடலை மாவுடன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர்ந்ததும், மெதுவாக தேய்த்து, தண்ணீரால் கழுவினால் முடிகள் உதிர்ந்திடும்.

*கரும்புள்ளிகள் மற்றும் முகச்சுறுக்கங்களை நீக்கி சருமத்தை பொலிவுடன் வைத்துக் கொள்ளும்.

தாத்ரி கஸ்தூரி மஞ்சள்

100% சுத்தமானது. நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு எந்தவித ரசாயன கலப்படம் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது.

இந்த கிழங்கு முதிர்ந்த பிறகு தான் பறிக்கவேண்டும். இளம் கிழங்கினை பறித்தால் அதை பொடிக்க முடியாது. அதேபோல் நன்கு முதிர்ந்துவிட்டால், அது மரமாக மாறிடும். அதனால் கிழங்கின் இலை மஞ்சள் நிறமாக மாறியதும் அதன் தண்டு பகுதி காய்ந்து போகும் நிலையில் இருக்கும் போது கிழங்கினை அறுவடை செய்யவேண்டும். அவ்வாறு அறுவடை செய்யப்பட்ட கிழங்குகள் ஆய்வுக் கூடத்தில் தரம் பார்த்து பிரிக்கப்படும். அதன் பிறகு அவை நிழலில் நன்கு உலர்ந்த பிறகு, மிகவும் மிருதுவாக அரைக்கப்படும். இவை ஒவ்வொரு நிலையினை கடக்கும் போது அதன் தரம் குறையாமல் பாதுகாக்கப்படுகிறது.

தாத்ரி கஸ்தூரி மஞ்சளினை தண்ணீரில் குழைத்து உடம்பில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவலாம். மிருதுவான சருமம் உள்ளவர்கள் தண்ணீருக்கு பதில் தேங்காய் எண்ணெய், தேங்காய்ப்பால், தயிர் அல்லது பசும்பாலில் கலந்து பயன்படுத்தலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கணவன் – மனைவி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post மனதை மயக்கும் மணப்பெண் ப்ளவுஸ்கள்! (மகளிர் பக்கம்)