மங்குஸ்தான் பழத்தின் நன்மைகள்! (மருத்துவம்)

Read Time:3 Minute, 22 Second

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விளையும் பழமாகவும், அதிக மக்களால் விரும்பி சாப்பிடப்படும் ஒரு பழமாகவும் மங்குஸ்தான் பழம் இருக்கிறது. இப்பழத்தின் தாயகம் மலேசியா ஆகும். ஆரம்பகாலத்தில் தாய்லாந்து, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகம் பயிரிடப்பட்டு வந்தன. மங்குஸ்தான் இன்று இந்தியாவிலும் பயிரிடப்பட்டு வருகின்றது. இப்பழம் மிகவும் சுவை மிக்கது மட்டுமல்ல, ஆரோக்கியம் நிறைந்ததாகவும் பல்வேறு நன்மைகளை அளிப்பதாகவும் உள்ளது.

அதிகமான வெப்ப காலங்களில் உடலில் ஏற்படும் அதிக தாகம், அதிக வெப்பம் போன்றவற்றை தீர்க்கிறது. இப்பழத் தோலில் துவர்ப்பு சுவை தரும் டானின் எனும் சத்து இருப்பதால் கடுமையான சீதபேதி, ரத்தப் பேதிக்கு மருந்தாக பயன்படுகிறது. மங்குஸ்தான் பழத்தை தினமும் ஒரு முறை மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடை குறைந்து உடல் சரியான எடையில் இருக்கும்.சிறுநீர் கோளாறு, வெள்ளைப்படுதல், வயிற்றுப்போக்கு போன்றவைகளை குணமாக்கும்.

இதிலுள்ள பெக்டின் எனும் நார்ச்சத்துப் பொருளானது உடலில் கெட்ட கொழுப்பை கரைத்து உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது. மலச்சிக்கலை போக்கும். மங்குஸ்தான் பழத்திலுள்ள வைட்டமின் சி சத்தானது தோலில் உண்டாகும் குறைபாடுகள், சுருக்கம் போன்றவற்றை போக்கி தோலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்வலி போன்றவற்றை குணமாக்குகிறது. மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் சம்பந்தமான நரம்புகள் புத்துணர்ச்சியாகும்.

நோய்களை குணமாக்கும் பி குரூப் வைட்டமின்களான நியாசின், தயாமின், ஃபோலிக் அமிலம், தாமிரம், மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இப்பழத்தில் உள்ளன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி உடலை ஆரோக்கியமாகப் பேண உதவுகிறது.மங்குஸ்தானில் உள்ள சன்தொஸ் எனும் திரவமானது காசநோயைக் குணமாக்க உதவுகிறது.புற்று நோயைக் குணப்படுத்துவதற்கு மங்குஸ்தான் பயன்படுகின்றது. உணவு ஜீரணம் ஆகாமல் வாய்வுத் தொல்லை ஏற்பட்டு மூலம் உருவாகிறது. மங்குஸ்தான் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது மூல நோயை முற்றிலுமாக குணமாக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அந்தரங்க பகுதியில் இது இருக்க காரணம் என்ன தெரியுமா?..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post கணவனுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட பாடம் எடுத்த மாமனார், மாமியார் – உண்மை கதை..!! (அவ்வப்போது கிளாமர்)