மருந்தாகும் அஞ்சறைப் பெட்டி!! (மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 57 Second

நமது சமையலறையில் இருக்கும் அஞ்சறைப் பெட்டி ஒரு மருத்துவரின் மருந்து பெட்டி போன்றது. அதிலிருக்கும் மசாலாப் பொருட்கள், சில உணவு வகைகளுக்கு ருசி, மணம் தருவதோடு மருந்தாகவும் உடலை இளைக்கச் செய்ய பயன்படுகிறது.

  1. இஞ்சி: இது உடல் சூட்டை அதிகமாக்கி உடலின் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
  2. பூண்டு: இது இதய நோய் தடுப்பிற்கு ஏற்றது. சிறுநீரை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கும், உடலை இளைக்க செய்வதற்கும் இது வழி செய்கிறது.
  3. பெருஞ்சீரகம்: இது உணவை ஜீரணிக்க உதவுகிறது. பலர் இதை தேயிலையோடு சேர்த்தோ தனியாகவோ, டீ செய்து பருகி, பசியை குறைத்து உடல் இளைக்க உபயோகிக்கிறார்கள்.
  4. மிளகாய் பொடி: மிளகில் உள்ள காப்ஸேஸின் என்னும் பொருள் மிளகாயிலும் இருப்பதால் உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தி வியர்வை அதிகமாக வர காரணமாகி நமது உடல் சீக்கிரம் கலோரிகளை எரிக்க உதவுகிறது. உடல் எடையும் குறையும்.
  5. சீலரி விதை: இது கடுகு போல இருக்கும். சிறுநீரை அதிகமாக வெளியேற்றி உடல் எடையை சீராக்குகிறது. சர்க்கரை வியாதிக் காரர்களின் அசட்டு பசி வராமல் தடுக்கிறது.
  6. பார்லி: இது கொத்தமல்லியை போல் தோற்றம் உள்ள ஒரு கீரை வகை. ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலுக்கு சக்தியைக் கொடுத்து, உடலில் அதிகப்படி நீர் தங்காமல் வெளியேற்றி எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சேமிப்பு வழிகாட்டி: வாழ்க்கை+வங்கி=வளம்!! (மகளிர் பக்கம்)
Next post ‘அந்த‘ விஷயத்தில் உங்களுக்கும் இந்த சந்தேகமெல்லாம் இருக்கா?… இப்ப தீர்த்துக்கோங்க…..!! (அவ்வப்போது கிளாமர்)