மூலத்தை விரட்டும் துத்திக் கீரை!! (மருத்துவம்)
“துத்திக் கீரை” பருத்தி இனத்தைச் சார்ந்த ஒரு செடி. இதற்கு “அதிபலா” என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதை ஆங்கிலத்தில் “Indian mallow” என்று அழைப்பர். இதன் இலைகள் மிகவும் பசுமையாக இதய வடிவில் இருக்கும். இதில் மஞ்சள் நிறத்தில் அழகான பூக்கள் பூக்கும். இதனுடைய விதை, வேர், இலை, பூ, காய் என அனைத்தும் மருத்துவத் தன்மைகொண்டது. இதன் காய்கள் தோடு போன்று காணப்படும். இது இனிப்புச் சுவை உடையது. உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரக்கூடியது. இது கடற்கரை ஓரங்கள் மற்றும் சாலை ஓரங்களில் வளரக்கூடியது. இது இரண்டு முதல் மூன்று அடி உயரம் வளரக்கூடியது. 29 வகையான துத்திகள் உள்ளன.
ஆனால், அதிகமாகப் பயன்படுத்தப்படுவது “பணியாரத் துத்தி”.துத்திக் கீரை“மூலநோய் கட்டி முளைபுழுப்புண் ணும்போகுஞ்சாலவதக் கிக்கட்டத் தையலே! – மேலுமதைஎப்படியேனும் புசிக்க எப்பிணியும் சார்ந்தமுறும்இப்படியிற் றுத்தியிலை யை”. – அகத்தியர் குணவாகடம்துத்திக் கீரையானது மூலம், கட்டி, புண், முறைகள், புழுப்பட்ட புண் போன்றவைகளைப் போக்கும்.துத்தி மலர்துத்தி மலரை நிதம் துய்க்கின்ற பேர்களுக்குமெத்தவிந்துவும் பெருகும் மெய்குளிரும் – சத்தியமே வாயால் விழுமிரத்தம் மாறும் இருமலறுந் தேயாமதி முகத்தாய் செப்பு’துத்தி மலரை உண்பதால் குருதி வாந்தி, இருமல் நீங்கும். ஆண்மை பெருகும், குளிர்ச்சி உண்டாகும்.
துத்தி வித்துகையிற்கா லிற்படர்ந்த கார்மேகம் போயொழியும்மெயிலுறுங் குட்டம்போம் வெப்பபகலுந் – துய்யதிரையத்திதனை யொத்தவிழி யாரணங்கே நாட்டிலுறுந்துத்தி விதையைச் சுவை.துத்தி விதையினால் கரும்புள்ளி, பெருநோய் உட்சூடு நீங்கும்.துத்திக் கீரையின் பயன்கள்இக்கீரையை பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிடுவது வழக்கம். மூலவாய்வுக்கு இது நன்மை தரும்.இந்தக் கீரையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டுவர தசைகளுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதனால்தான் இது ‘அதிபலா’ என்று அழைக்கப்படுகிறது.இதன் பூவை உலர்த்திப் பொடித்து, பாலும் கற்கண்டும் சேர்த்து சாப்பிட்டு வர குருதி வாந்தி, அழல் நீங்கும். தேகம் குளிர்ச்சி உண்டாகும். ஆண்மை பெருகும்.
இதன் விதையைப் பொடித்து சர்க்கரையுடன் கலந்து மூவிரல் அளவு காலை, மாலை உண்டுவர கரும்புள்ளி, உட்சூடு, பெருநோய் நீங்கும்.இதன் இலை மற்றும் விதைகளை குடிநீர் செய்து குடிக்க மூலம், வெள்ளை நோய்கள் நீங்கும்.துத்தி இலையை நீரிட்டு காய்ச்சி, அதனுடன் பாலும் சர்க்கரையும் சேர்த்து உட்கொண்டால், கழிச்சலை உண்டாக்கி, கீழ்வாய்க்கடுப்பு, சூடு முதலியவைகளை தணிக்கும்.துத்தி இலை சாறு 24 கிராம், நெய் 12 கிராம் சேர்த்துக் கொடுக்க அழற்சியால் உண்டாகும் கழிச்சல் போகும்.துத்திக் கீரையின் வேர், திராட்சை பழம் மற்றும் நீர் சேர்த்து காய்ச்சி சுண்டவைத்து, வடிகட்டிக் கொண்டு காலை, மாலை இருவேளையும் உட்கொண்டு வர மேகச்சூடு, நீர்ச்சுருக்கு, தாகம் முதலியன தீரும்.
இக்கீரையை, ஆமணக்கு நெய் விட்டு வதக்கி, ஒற்றடம் கொடுத்து கட்ட மூலம், மூலத்தில் உண்டாகும் கட்டிகள், புண்கள் நீங்கும்.இதன் இலையை கொதிக்கின்ற தண்ணீரில் போட்டு, வேகவைத்து அந்நீரில் துணியை துவைத்து பிழிந்து ஒற்றடம் கொடுக்க வலிகள் தீரும்.இக்கீரையின் இலை அல்லது வேரை நீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் வாய் கொப்பளிக்க பல் ஈறுகளில் உண்டாகும் நோய்கள் நீங்கும். பல் ஈறு பலப்படும். இக்கீரையை பிழிந்து எடுத்த சாறுடன், பச்சரிசி மாவு கூட்டி களிக் கிண்டி கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை விரைவில் பழுத்து உடையும். கட்டிகளும் விரைவில் ஆறும்.உடலில் ஏதேனும் புண்கள் ஆறாமல் இருந்தால், இதன் இலையைப் பிழிந்து சாறு எடுத்து, மஞ்சளுடன் கலந்து பூசிவர புண்கள் விரைவில் குணமாகும்.இக்கீரையின் விதைகளை கரி நெருப்பில் போட்டு அதிலிருந்து எழும்பும் புகையை, வயிற்றில் சிறு புழுக்கள் உள்ள குழந்தைகளின் ஆசனவாயில் படும்படி செய்ய புழுக்கள் வெளிப்படும்.
தொகுப்பு : திலீபன் புகழ்துத்திக்கீரைக் கூட்டுதேவையான பொருட்கள்:துத்திக்கீரை – 200 கி, சின்ன வெங்காயம் – 100 கி, வேகவைத்த துவரம் பருப்பு – 3 டீஸ்பூன், மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்.செய்முறை : துத்திக்கீரை மற்றும் சிறிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் சீரகத்தைப் போடவும். நறுக்கிவைத்திருக்கும் கீரை மற்றும் வெங்காயத்தை வாணலியில் போட்டு வதக்கவும். பிறகு, தேவையான அளவு நீர் ஊற்றி வேகவைக்கவும். நன்றாக வெந்த பின்னர் துவரை, மிளகுத்தூள் போடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கினால், ஆரோக்கியமான கூட்டு தயார். இதனைச் சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட்டுவர மூலம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலும் நீங்கும்….