அஸ்வகந்தாவின் மருத்துவ குணங்கள்! (மருத்துவம்)

Read Time:3 Minute, 12 Second

அமுக்கிராக்கிழங்கின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவாகும். இது அஸ்வகந்தா, அசுவகந்தம், அசுவகந்தி, அமுக்குரவு, இருளிச் செவி, அசுவம் போன்ற வேறு பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இதன் இலை, வேர், கிழங்கு ஆகிய அனைத்துமே மருத்துவ பயன் கொண்டதாகும். இது வெப்ப மண்டல பிரதேசங்கள், மற்றும் காடுகளில் வளரும் தன்மை உடையது. கசப்பு மற்றும் துவர்ப்பு சுவையும், உஷ்ண வீரியமும் கொண்டு இருக்கும்.

அத்துடன் இதில் உடலை வளர்க்கும் வேதியியல் பொருட்களும் , புரதங்களும், அமினோ அமிலங்களும் உள்ளது. அறிவியல் ஆய்வுகளின் மூலம் அமுக்கிராங்கிழங்கு பக்க விளைவுகள் இல்லாத மிகவும் பயன்தரக்கூடிய ஒரு மூலிகை மருந்தாக அறியப்படுகிறது.அமுக்கிராக்கிழங்கின் சாறு இருமல், இழுப்பு, வெண் குஷ்டம், கசாயம், நஞ்சு, ரணங்கள் ஆகியவற்றை குணமாக்கும். மேலும், அதன் சாற்றை தேன், நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் வலிப்பு நோய் நீங்கும்.அமுக்கிராக்கிழங்கின் சாறு ஞாபகமறதி, தாய்ப்பால் சுரப்பு, நரம்புத் தளர்ச்சி, உடல் இளைப்பு ஆகியவற்றுக்கு நல்ல நிவாரணியாக அமைகிறது.

மேலும், மலட்டுத் தன்மை ஏற்படாமல் தடுக்கிறது. தாது வளர்ச்சிக்கு உதவுகிறது. நரம்புத் தளர்ச்சி போன்றவற்றை குணப்படுத்தும்.நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாக இருப்பவர்களுக்கு படுக்கை புண்கள் உருவாகும். அப்படிப்பட்டவர்கள் அமுக்கிராகிழங்கு சூரணத்தை பாலில் கலந்து வீக்கம், படுக்கைப் புண்கள் இருக்கும் இடத்தில் மேல் பூச்சாகப் பூசி வர படுக்கை புண்கள் விரைவில் குணமாகும். மேலும், நீண்ட நாட்களாக இருக்கும் கல்லீரல் நோய்களை குணமாக்கவும் அமுக்கிராக் கழங்கு பெரிதும் உதவுகிறது.அமுக்கிராக்கிழங்கை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் குழந்தைகள் திடகாத்திரமாக வளர்வார்கள். மேலும், அமுக்கிராக்கிழங்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.அமுக்கிராக்கிழங்கு கஷாயத்தை இளஞ்சூட்டில் நெய்ப்பக்குவமாக செய்து மாதவிடாய்க் காலத்தில் சாப்பிட்டு வந்தால், மலட்டுத் தன்மை நீங்கிப் பிள்ளைப்பேறு உண்டாகும். தைராய்டு பிரச்னைகளை சரி செய்யும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆரோக்கிய சாலட் உணவுகள்!! (மகளிர் பக்கம்)
Next post வசீகர தோற்றத்திற்கு 3டி ஃபிரேம்கள்!! (மகளிர் பக்கம்)